Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சும்மா ஒன்னும் இங்க வரலை.. இனிமே தான் இருக்கு.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வார்னிங்.. பாண்டிங் அதிரடி

துபாய் : 2௦20 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி அணியின் சிறந்த ஆட்டம் இனிதான் என அவர் கூறி உள்ளார். மேலும், தங்கள் அணியின் திட்டங்களை பற்றியும் அவர் பேசினார்.

டெல்லி அணி 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பெரும் போராட்டத்துக்கு பின்பே முன்னேறியது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

கடந்த 12 சீசன்களில் டெல்லி அணி ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. இது தான் டெல்லி அணியின் முதல் இறுதிப் போட்டி. அந்த அணியின் முன்னேற்றத்தில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கு பெரும் பங்கு உள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

கடந்த இரு ஆண்டுகளாக அந்த அணியை படிப்படியாக வளர்த்து, முன்னேற்றி இருக்கிறார். அவர் இறுதிப் போட்டிக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதே சீசனில் மும்பை அணியிடம் மூன்று முறை தோல்வி அடைந்தாலும் இந்த முறை வெற்றி பெறுவோம் என அவர் சூசகமாக கூறினார்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

பாண்டிங் கூறுகையில், "ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பெரும் எதிர்பார்ப்புடன் தான் வந்தேன். நாங்கள் நல்ல வீரர்கள் அடங்கிய அணியை அமைத்துள்ளோம் என தெரியும். நல்ல துவக்கத்தை பெற்றோம். இடையே தடுமாறினோம். ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் எங்கள் வீரர்கள் இரண்டு நல்ல வெற்றியை பெற்றார்கள். எங்கள் சிறந்த ஆட்டத்தை இறுதிப் போட்டியிலும் ஆடுவோம் என நம்புகிறேன்" என்றார்.

அதற்குதான் வந்துள்ளோம்

அதற்குதான் வந்துள்ளோம்

"இது நல்ல சீசன். ஆனால், இதுவரை நாங்கள் எதையும் வெல்லவில்லை. அதற்குதான் இங்கே வந்துள்ளோம். இங்கே நாங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல வந்துள்ளோம். எங்கள் சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம்." என்றார் பாண்டிங்.

இனிதான் இருக்கு

இனிதான் இருக்கு

மார்கஸ் ஸ்டோய்னிஸ் துவக்க வீரராக ஆட வைத்ததை பற்றி மகிழ்ச்சி தெரிவித்த அவர், நான்கு தொடர் தோல்விகளுக்கு பின் டெல்லி அணி மீண்டு வந்ததை குறிப்பிட்டு, தங்களின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை எனக் கூறி இறுதிப் போட்டிக்கான எச்சரிக்கையை விடுத்தார்.

Story first published: Tuesday, November 10, 2020, 11:34 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+