Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரர் காயம்.. ரோஹித் சொன்ன அந்த விஷயம்.. மும்பை அணி மர்மம்.. பைனலுக்கு முன் பரபரப்பு!

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் காயத்தால் பிளே-ஆஃப் போட்டியில் பாதியில் விலகி இருந்தார்.

அவருக்கு என்ன ஆனது? ஐபிஎல் இறுதிப் போட்டியில் அவர் ஆடுவாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

இது குறித்து ரோஹித் சர்மா பேசி உள்ளார். ஆனாலும், இறுதிப் போட்டி துவங்கும் வரை மர்மம் நீடிக்கும் என தெரிகிறது.

முக்கிய பந்துவீச்சாளர்

முக்கிய பந்துவீச்சாளர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட். பும்ராவுடன் இணைந்து துவக்க ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் எதிரணியை கதிகலங்க வைத்து வருகிறார் போல்ட். அவரது ஸ்விங் மற்றும் வேகமான பந்துவீச்சு ஐக்கிய அரபு அமீரகத்திலும் பேட்ஸ்மேன்களை மிரள வைத்து வருகிறது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

இந்த சீசனில் அவர் 22 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இதில் பெரும்பாலும் பவர்பிளே ஓவர்களில் தான் அவர் விக்கெட் வீழ்த்தி உள்ளார்.அதன் காரணமாக, மும்பை அணி பந்துவீச்சில் துவக்கத்திலேயே எதிரணியை அழுத்தத்தில் சிக்க வைத்து வெற்றிகளை குவித்தது.

தடுமாறிய டெல்லி

தடுமாறிய டெல்லி

பிளே-ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ட்ரென்ட் போல்ட் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்த டெல்லி அணி ரன்னே எடுக்காமல் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது.

காயம்

காயம்

அந்தப் போட்டியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசிய ட்ரென்ட் போல்ட் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அத்துடன் களத்தை விட்டு வெளியேறினார். காயம் காரணமாக அவர் ஓய்வில் இருந்தார். அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது,

ஆடுவாரா?

ஆடுவாரா?

இந்த நிலையில் போல்ட் மும்பை அணியில் பயிற்சியில் ஈடுபட்டார். அது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ட்ரென்ட் போல்ட் பயிற்சியில் சிறப்பாக பந்து வீசியதாகவும் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

டெல்லி நிலை

டெல்லி நிலை

ட்ரென்ட் போல்ட் வேகத்தால் மிரண்ட அதே டெல்லி அணிக்கு எதிராக மும்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்தப் போட்டியில் போல்ட் ஆடினால் நிச்சயம் டெல்லி அணி பின்னடைவை சந்திக்கும். போல்ட் - பும்ரா இணைந்தால் டெல்லி அணி அழுத்தத்தை சந்திக்கும்.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

மும்பை அணி ட்ரென்ட் போல்ட்டை இறுதிப் போட்டியில் ஆட வைக்க கடும் முயற்சி செய்யும். ஆனாலும், போட்டி துவங்கும் வரை அதை உறுதியாக கூற முடியாது. ஒருவேளை ட்ரென்ட் போல்ட் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் பாட்டின்சன் அணியில் சேர்க்கப்படுவார்.

Story first published: Tuesday, November 10, 2020, 10:19 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+