Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த வீரரும் தொடாத உச்சம் வியக்க வைக்கும் ஐபிஎல் ரெக்கார்டு.. பைனல் வரை கதிகலங்க வைத்த நியூசி. வீரர்

துபாய் : மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் இறுதிப் போட்டியில் ட்ரென்ட் போல்ட் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி வியக்க வைத்தார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் எந்த பந்துவீச்சாளரும் தொடாத புதிய உயரத்தை தொட்டு சாதனை படைத்துள்ளார்.

ஒரே சீசனில் போட்டியின் முதல் ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் டெல்லி அணி தான் அவரிடம் அதிக முறை அவரிடம் சிக்கி உள்ளது.

ட்ரென்ட் போல்ட்

ட்ரென்ட் போல்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுடன் சேர்ந்து புதிய பந்தை வீச சரியான வேகப் பந்துவீச்சாளர் தேவைப்பட்டது. இந்த சீசனுக்கு முன் ட்ரென்ட் போல்ட்-ஐ டெல்லி அணியிடம் இருந்து வாங்கியது மும்பை. அவர் இந்த சீசனில் மும்பை அணிக்கு பந்துவீச்சில் தொடர்ந்து சிறப்பான துவக்கம் அளித்து வந்தார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் காயத்துடன் ஆடினார். ஆனாலும், 3 விக்கெட்கள் வீழ்த்தி டெல்லி அணியை நிலைகுலைய வைத்தார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எட்டு விக்கெட்கள்

எட்டு விக்கெட்கள்

இந்த சீசனில் இறுதிப் போட்டி உட்பட அவர் வீசிய போட்டியின் முதல் ஓவர்களில் எட்டு விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இது ஐபிஎல் சாதனை ஆகும். ஒரு இன்னிங்க்ஸின் முதல் ஓவரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார் ட்ரென்ட் போல்ட்.

டெல்லி அணி நான்கு முறை

டெல்லி அணி நான்கு முறை

இதில் இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிராக ஆடிய நான்கு போட்டிகளிலும் அவர் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி உள்ளார். இறுதிப் போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை முதல் ஓவரின் முதல் பந்திலேயே வீழ்த்தி மிரட்டினார்.

அடுத்த இடங்கள்

அடுத்த இடங்கள்

ட்ரென்ட் போல்ட்டுக்கு அடுத்த இடத்தில் புவனேஸ்வர் குமார் இருக்கிறார். அவர் 2016இல் 6 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 2013இல் பிரவீன் குமார் 5, 2012இல் ஜாகிர் கான் 5 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடங்களில் உள்ளனர். ட்ரென்ட் போல்ட் சாதனையை அத்தனை எளிதில் முறியடிக்க முடியாது என இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் போல்ட் 3 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 65*, ரிஷப் பண்ட் 56 ரன்கள் குவித்தனர்.

Story first published: Tuesday, November 10, 2020, 23:26 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+