Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. தாராள பிரபு டெல்லி கேபிடல்ஸ் செய்த காரியம்.. கதையை முடிக்கப் போகும் வீரர்

துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கு முன் நல்ல வீரர்களை தேடித் தேடி தங்கள் அணிக்கு மாற்றிக் கொண்டது டெல்லி கேபிடல்ஸ்.

அத்துடன் தங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றியது.

அதுதான் பெரிய வினையாகவந்து நின்றுள்ளது. பிளே-ஆஃப் சுற்றில் எந்த வீரை டெல்லி அனுப்பி வைத்ததோ, அதே வீரர் அந்த அணிக்கு தோல்வியை பரிசாகக் கொடுத்தார்.

ட்ரென்ட் போல்ட்

ட்ரென்ட் போல்ட்

ட்ரென்ட் போல்ட் தான் அந்த வீரர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் 2018ஆம் ஆண்டு ஆடிய அவர் 14 போட்டிகளில் 18 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அடுத்த ஆண்டு காகிசோ ரபாடா டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசி அவரது இடத்தை பறித்துக் கொண்டார்.

ஏமாற்றத்தில் இருந்தார்

ஏமாற்றத்தில் இருந்தார்

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் 5 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அதிக போட்டிகளில் தனக்கு வாய்ப்பு கிடைக்கததால் அவர் ஏமாற்றத்தில் இருந்தார். இதை அடுத்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றியது டெல்லி அணி.

ஆபத்து

ஆபத்து

இந்த மாறுதல் குறித்து அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. நல்ல வேகப் பந்துவீச்சாளரை யாராவது வேறு அணிக்கு கொடுப்பார்களா? என கேள்வி எழுந்தது. அது தற்போது டெல்லி அணிக்கே ஆபத்தாக வந்து முடிந்துள்ளது. பிளே-ஆஃப் சுற்றில் முதல் தகுதிப் போட்டியில் போல்ட் தான் வீசிய முதல் ஓவரில் ப்ரித்வி ஷா, ரஹானே என இரண்டு பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆக்கி வெளியே அனுப்பினார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

அடுத்து இறுதிப் போட்டியில் அவர் என்ன செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது முன்னாள் அணியை அவர் விக்கெட் வேட்டையாடி தோற்கடிப்பாரா? என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

Story first published: Monday, November 9, 2020, 18:53 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+