Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலி செய்துவிட்டார்.. தூக்கிடலாம்.. சிஎஸ்கேவில் நடக்க போகும் முதல் களையெடுப்பு.. வலுக்கும் கோரிக்கை!

துபாய்: சிஎஸ்கே அணியில் இருந்து முதலில் யாரை எல்லாம் நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கைகளை அடுக்க தொடங்கி உள்ளனர்.

சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மொத்தம் 10 போட்டிகளில் 7 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்துவிட்டது.

சிஎஸ்கேவின் தோல்வியை விட மோசமான விஷயம் ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூர் போன்ற அணிகளிடம் கூட இந்த முறை சிஎஸ்கே தோல்வி அடைந்துவிட்டது. சின்ன அணிகளிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்ததுதான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தொடர் தோல்விகளால் தற்போது சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்வதே சந்தேகம் ஆகியுள்ளது. அடுத்தடுத்த 4 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெற்றாலும் கூட பிளே ஆப் செல்வது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணங்கள்

காரணங்கள்

அணியின் பேட்டிங், வீரர்களின் மோசமான பார்ம், பவுலர்கள் சரியாக பவுலிங் செய்யாதது, பேட்டிங் ஆர்டர் சொதப்பல் என்று பல விஷயங்கள் சிஎஸ்கே அணிக்கு எதிராக இருக்கிறது. பேட்டிங் மோசமாக சொதப்பியதுதான் அணியின் தோல்விக்கு காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. வாட்சன், ஜாதவ், தோனி என்று யாருமே சிஎஸ்கே அணிக்காக சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியை மொத்தமாக காலி செய்தது பயிற்சியாளர் பிளமிங்தான் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. பிளமிங்தான் வீரர்களை சரியாக தயார் செய்யவில்லை என்று புகார் வைக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தில் போட்டி நடக்கிறது என்று தெரிந்ததும் எல்லா அணியும் அதற்கு ஏற்றபடி தங்கள் வீர்ரகளை தயார் செய்தது.

பிளமிங் எப்படி

பிளமிங் எப்படி

ஆனால் பிளமிங் அப்படி அணியில் பெரிய அதிரடி மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. முக்கியமாக அணியில் இருக்கும் ஸ்பின் பவுலர்களை தயார் செய்யவில்லை. ஸ்பின் பிட்சை முழுக்க முழுக்க நம்பி சென்று சிஎஸ்கே சொதப்பியது. சேப்பாக்கம் போலவே பிட்ச் இருக்கும் என்று நம்பி சென்று பிளமிங் ஏமாற்றம் அடைந்துள்ளார். பிளமிங் போட்ட பிளான்கள் எல்லாமே கிட்டத்தட்ட தோல்வி அடைந்துவிட்டது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அதேபோல் அணியில் இளம் வீரர்களையும் பிளமிங் சரியாக தேர்வு செய்யவில்லை. பிளமிங்தான் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களை கடினமான சூழ்நிலைக்கு தயார் செய்து இருக்க வேண்டும். ஆனால் அதை பிளமிங் செய்யவில்லை. மூத்த வீரர்களையும் பிளமிங் வழிக்கு கொண்டு வரவில்லை. இளம் வீரர்களையும் கட்டுப்படுத்தவில்லை. இதனால் இவர் மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் கோபத்தில் உள்ளது.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளமிங்கை நீக்க வேண்டும் என்று இதனால் கடுமையான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. சிஎஸ்கே அணி நிர்வாகமும் இவரை நீக்கும் முடிவில்தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே தற்போது அணிக்குள் களையெடுக்கும் முடிவில் உள்ளது. அதில் பெரும்பாலும் பிளமிங்தான் முதல் நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, October 22, 2020, 16:02 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+