Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசாகிடுச்சி.. கொஞ்சமாவது மூளையோடு விளையாடுங்க.. தோனியை சீண்டிய முன்னாள் பாக் வீரர்.. எவ்வளவு திமிர்

துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனி களத்தில் மூளையை பயன்படுத்தி விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் மோசமாக விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

அதிலும் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் இந்த தொடரில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோனி 40+ ரன்கள் எடுத்தார். தோனியின் மோசமான பேட்டிங் பார்மை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மூளையை பயன்படுத்த வேண்டும்

மூளையை பயன்படுத்த வேண்டும்

இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி களத்தில் மூளையை பயன்படுத்தி விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாவெட் மியன்டாட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜாவெட் மியன்டாட் தனது விமர்சனத்தில், தோனி உடல் பார்க்க பிட்டாக இருக்கிறது. ஆனால் அவர் உண்மையில் பிட்டாக இல்லை.

பிட்னஸ் தோனியிடம் இல்லை

பிட்னஸ் தோனியிடம் இல்லை

கிரிக்கெட் விளையாடுவதற்கான பிட்னஸ் தோனியிடம் இல்லை. தோனி தான் ஆடும் முறையில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடும் போது என்னுடைய மூளையை வைத்து விளையாடினேன். உடலை வைத்து அல்ல. நீங்கள் மூளையை பயன்படுத்தினால் எந்த வயதிலும் நன்றாக ஆடலாம்.

மூளை முக்கியம்

மூளை முக்கியம்

உங்களுக்கு எவ்வளவு வயதானாலும் நீங்கள் நன்றாக ஆட முடியும். நீங்கள் முன்பு இருந்த வீரர் போல இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போதும் நீங்கள் உங்கள் அணிக்கு பயன்பட கூடிய நபராக இருக்க முடியும். தோனிக்கு வயதாகிவிட்டது, அதனால் மூளையை பயன்படுத்தி ஆட முடியும்.

பயிற்சி அதிகரிப்பு

பயிற்சி அதிகரிப்பு

அதேபோல் தோனி பயிற்சியை அதிகரிக்க வேண்டும். வலை பயிற்சி நேரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். அவர் 20 சிட் அப் எடுக்கிறார் என்றால் கூடுதலாக 30 சிட் அப்கள் எடுக்க வேண்டும். இப்படி அனைத்திலும் தனது பயிற்சியை அவர் அதிகரிக்க வேண்டும், என்று ஜாவெட் மியன்டாட்கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணிக்காக 233 ஒருநாள் போட்டிகள் மற்றும் 124 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஜாவெட் மியன்டாட் ஆடியுள்ளார். பாகிஸ்தானில் மதிக்கதக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர். தற்போது கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது தோனியை இவர் விமர்சனம் செய்துள்ளார்.

சர்ச்சை ஆகியுள்ளது

சர்ச்சை ஆகியுள்ளது

தோனியை மூளையை பயன்படுத்தி விளையாடும்படி இவர் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. நீங்கள் அப்படி என்ன சாதித்துவிட்டீர்கள்? ஏன் தோனியை சீண்டுகிறீர்கள்? எவ்வளவு திமிர் இருந்தால் வயதை கிண்டல் செய்வீர்கள் என்று இணையத்தில் தோனி பேன்ஸ் ஜாவெட் மியன்டாட்டிற்கு எதிராக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

Story first published: Monday, October 19, 2020, 20:16 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+