Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சட்டையை பிடிக்க போனார்.. இனி வாயை திறக்க மாட்டார்.. கோலியை தேவையின்றி சீண்டி.. அவமானப்பட்ட கம்பீர்

துபாய்: தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் அடுத்தடுத்து கருத்து கூறி அவமானப்படுவதே கவுதம் கம்பீரின் வேலையாக மாறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்குள் கங்குலி காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களுக்கும், தோனி காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

தோனி - சேவாக் இடையே இருக்கும் மோதல், தோனி - கம்பீர் இடையே மோதல் என்று பல விஷயங்கள் இதுவரை நடந்துள்ளது. அதிலும் டெல்லியை சேர்ந்த கோலி - கம்பீர் இடையே கடந்த பல வருடமாக மோதல்கள் நடந்து வருகிறது.

என்ன மோதல்

என்ன மோதல்

இந்திய அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்ற சமயத்தில் இருந்தே இரண்டு பேருக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. பல முறை கோலியின் கேப்டன்சியை கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரோஹித் சர்மாதான் நல்ல கேப்டன், கோலி நல்ல பேட்ஸ்மேன், ஆனால் கேப்டன் கிடையாது என்று பல முறை கம்பீர் கடுமையாக கோலியை சீண்டி உள்ளார்.

எப்படி

எப்படி

அதிலும் கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த சமயத்தில் எல்லாம் பெங்களூர் - கொல்கத்தா போட்டிகள் பரபரப்பாக இருக்கும். பெங்களூர் அணியை கம்பீர் 49 ரன்களுக்கு சுருட்டியது, வேறு ஒரு போட்டியின் போதே கோலியின் சட்டையை பிடித்து இழுக்க பாய்ந்தது என்று கம்பீர் நிறைய விஷயங்கள் செய்து இருக்கிறார். கோலி கம்பீரை கெட்ட வார்த்தையில் திட்டியதும் கூட களத்தில் நடந்து இருக்கிறது.

கொல்கத்தா

கொல்கத்தா

அப்போதில் இருந்தே கொல்கத்தா பெங்களூர் மேட்ச் என்றால் கம்பீர் பாய்ந்து வந்து ஏதாவது கருத்து கூறுவார். சின்ராசை கையிலேயே பிடிக்க முடியாது என்பது போல கம்பீர் கோலிக்கு எதிராக ஏதாவது கடுமையான கருத்துக்களை கூறுவார். ஆனால் நேற்று இதேபோல் கம்பீர் இரண்டு கருத்துகளை கூறி, சில மணி நேரத்தில் கடுமையாக அவமானப்பட்டார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று பெங்களூர் அணி கொல்கத்தாவிற்கு எதிராக பவுலிங் செய்த போது முதல் இரண்டு ஓவர்களை கிறிஸ் மோரிஸ் மற்றும் சிராஜ் வீசினார்கள். சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழுந்தது. இதனால் மூன்றாவது ஓவரை மீண்டும் கிறிஸ் மோரிஸ்தான் வீச வேண்டும். வழக்கமாக புதிய பந்தில் கேப்டன்கள் இப்படித்தான் பவுலிங் ரொட்டேஷன் செய்வார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நேற்று கோலி வித்தியாசமாக மூன்றாவது ஓவரை சைனிக்கு கொடுத்தார். இதை தொலைக்காட்சியில் பேசிக்கொண்டு இருந்த கம்பீர் கடுமையாக கிண்டல் செய்தார். புதிய பந்தில் பவுலிங் செய்யும் போது மூன்றாவது ஓவரை புதிய பவுலருக்கு கொடுப்பது என்ன கேப்டன்சி?. இது தவறான முடிவு என்று கோலியை கடுமையாக கம்பீர் விமர்சனம் செய்தார்.

நடந்தது மாற்றம்

நடந்தது மாற்றம்

ஆனால் அவர் முழுதாக இந்த கருத்தை சொல்லி முடிக்கும் முன் சைனி அடுத்த பந்தில் சுப்மான் கில் விக்கெட்டை எடுத்தார். கம்பீர் தனது கருத்தை முழுதாக முடிக்கும் முன் தனது முடிவு சரிதான் என்பதை கோலி நிரூபித்தார். அதிலும் சைனி விக்கெட் எடுத்ததை பார்த்து கம்பீர் அதிர்ச்சி அடைந்தார். என்ன பேசுவது என்றே தெரியாமல் அவமானத்தில் அவருக்கு முகமே சிவந்து போய்விட்டது.

வேறு என்ன

வேறு என்ன

அதேபோல் நேற்று பேசிய கம்பீர், பெங்களூருக்கு கொல்கத்தா எதிரி கிடையாது. பெங்களூர் ஒரு கோப்பை கூட வென்றது இல்லை. ஆனால் கொல்கத்தா இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது என்று கூறினார் .ஆனால் நேற்று போட்டியில் கொல்கத்தாவை வெறும் 84 ரன்களுக்கு சுருட்டி பெங்களூர் இதற்கும் பதிலடி கொடுத்தது.

அவமானம் ஏன்

அவமானம் ஏன்

கம்பீர் இரண்டு முறை நேற்று தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. இனிமேல் கம்பீர் கருத்து கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக கோலி பற்றி பேசுவதை மொத்தமாக கம்பீர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இணையத்தில் பலரும் கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, October 22, 2020, 9:35 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+