Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு துணிச்சல் இல்லை.. இதுதான் கேப்டனுக்கு அழகா? தோனியை சீண்டும் கம்பீர்.. கடும் விமர்சனம்!

துபாய்: தோனிக்கு துணிச்சல் இல்லை, அவர் நல்ல கேப்டன் போல செயல்படவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் தோல்வியையே தொடர்ந்து சிஎஸ்கே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சென்னையின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டர் இரண்டும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

நேற்று போட்டியில் தோனியின் முடிவுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முக்கியமாக தோனி மிகவும் தாமதமாக இறங்கியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. முக்கியமாக தோனி 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.தோனியின் செயலை சென்னை ரசிகர்களே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கம்பீர் என்ன சொன்னார்

கம்பீர் என்ன சொன்னார்

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார், அதில் சென்னை அணியில் இக்கட்டான சூழ்நிலையில் கூட தோனி துணிந்து செயல்படவில்லை. அவர் ஏன் பேட்டிங் களமிறங்க இவ்வளவு தாமதம் செய்தார். அவர் 7வது இடத்தில் இறங்கியதை பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அது மிகவும் தவறான முடிவு.

கேப்டன்

கேப்டன்

ஒரு கேப்டன் இப்படி செய்ய கூடாது. ஒரு கேப்டனாக அவர் முன்பே களமிறங்கி இருக்க வேண்டும். முன்பே அவர் களமிறங்கி ஆடி இருக்க வேண்டும். ஒரு கேப்டனுக்கு அதுதான் அழகு. தோனி செய்தது தவறு.

வழி நடத்த வேண்டும்

வழி நடத்த வேண்டும்

தோனி அணியை முன்னின்று வழி நடத்த வேண்டும். 217 ரன்கள் என்பது அதிக இலக்கு. இப்படி இருக்கும் போது தோனி முன்னின்று அணியை வழி நடத்த வேண்டும். நேற்று டு பிளசிஸ் மட்டுமே தனியாக ஆடினார். தனியாக அவர் போராட்டம் செய்தார்.

கடைசி சிக்ஸ்

கடைசி சிக்ஸ்

கடைசி நேரத்தில் வந்து தோனி சிக்ஸ் அடித்தார். மூன்று சிக்ஸ் அடித்தார். அதை பாராட்டலாம். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. கடைசி நேரத்தில் இப்படி அதிரடி காட்டினால் என்ன பயன் இருக்கும்? என்று தோனியை மிக கடுமையாக கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

Story first published: Wednesday, September 23, 2020, 16:14 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+