For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிரிக்கிறார் என நினைக்க வேண்டாம்.. அவரை சீண்டிவிட்டார்கள்.. மௌனம் கலைத்த கங்குலி.. அதிரடி பேச்சு!

துபாய்: ஐபிஎல் தொடர் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி அது குறித்து முதல்முறையாக தற்போது மௌனம் கலைத்துள்ளார்.

கொரோனாவிற்கு இடையே நடந்து வரும் ஐபிஎல் தொடர் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. கடந்த ஒரு வருடமாக பெரிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடக்காத நிலையில் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களின் பசியை போக்கியுள்ளது.

அதிலும் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஐபிஎல் தொடர் நிறைய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

சிறந்த தொடர்

சிறந்த தொடர்

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே சிறந்தது இதுதான் என்று கூறும் அளவிற்கு இந்த தொடர் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி அது குறித்து முதல்முறையாக தற்போது மௌனம் கலைத்துள்ளார். அதில், இந்த ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

நிறைய விஷயம்

நிறைய விஷயம்

இந்த தொடரில் எல்லாமே இருக்கிறது. இதுதான் சிறந்த போட்டி, இவர்தான் சிறந்த வீரர் என்று சொல்ல முடியாத அளவிற்கு நிறைய விஷயங்கள் இந்த தொடரில் உள்ளது. கே. எல் ராகுல், தவான், மயங்க் அகர்வால் போன்ற இந்திய அணி வீரர்கள் மிக சிறப்பாக இந்த தொடரில் ஆடி வருகிறார்கள்.

பவுலர்கள்

பவுலர்கள்

அதிலும் இந்திய பவுலர்கள் சமி , பும்ரா போன்றவர்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். சில சூப்பர் ஓவர் போட்டிகள் எல்லாம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ரபாடா, ஆன்ரிச் நோட்ர்ஜ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

வாவ் சீசன்

வாவ் சீசன்

இந்த சீசன் ஒரு வாவ் சீசனாக உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஒரு போட்டிதான் நன்றாக இருந்தது என்று கூற முடியாது. எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது. நிறைய புதிய திறமைகள் இந்த தொடரில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர் திருப்திகரமாக சென்று கொண்டு இருக்கிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

சில முக்கியமான வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் பல அணிகள் குழம்பி போய் உள்ளது. முக்கியமாக கெயில் போன்ற வீரர்கள் கூட பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டனர். கெயில் வெளியே பார்க்க சிரித்தபடி நடந்து செல்வது போல இருக்கலாம்.

தேவையில்லாமல் சீண்டி விட்டனர்

தேவையில்லாமல் சீண்டி விட்டனர்

ஆனால் உண்மையில் அவர் அப்படி இல்லை. பெஞ்சில் உட்கார வைத்து அவரை தேவையில்லாமல் சீண்டி விட்டனர். அதனால்தான் அவர் சிறப்பான கம்பேக் கொடுத்தார். தன்னை பெஞ்சில் உட்கார வைத்ததற்கு பதிலடி கொடுத்தார். இந்த சீசனில் அணி நிர்வாகங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது, என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, October 23, 2020, 12:34 [IST]
Other articles published on Oct 23, 2020
English summary
IPL 2020: Ganguly first time talked about the season and its best moments.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+