Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப வேண்டாம்.. மொத்தமாக சிக்குவோம்.. கங்குலிக்கு பறந்த வார்னிங்.. பிசிசிஐ பிளான்.. பரபர ட்விஸ்ட்!

மும்பை : 2021 ஐபிஎல் தொடரில் பெரிய திட்டத்தை செயல்பட பிசிசிஐ தலைவர் கங்குலி துடித்து வருகிறார்.

ஆனால், அவரது திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதை சுட்டிக் காட்டி அதை தள்ளி வைக்க வேண்டும் என பிசிசிஐ அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இதை அடுத்து கங்குலியின் திட்டம் ஓராண்டு தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

கங்குலி திட்டம்

கங்குலி திட்டம்

2020 ஐபிஎல் தொடர் வெற்றி பெற்றதை அடுத்து 2021 ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டார் சவுரவ் கங்குலி. அதன் மூலம், ஐபிஎல் தொடரின் வருமானத்தை அதிகரிக்கலாம் என அவர் திட்டமிட்டார்.

2 புதிய அணிகள்

2 புதிய அணிகள்

அஹமதாபாத் நகரத்தை மையமாக வைத்து ஒரு அணியும், லக்னோ அல்லது கான்பூரை வைத்து மற்றொரு ஐபிஎல் அணியும் உருவாகும் என பரவலாக பேசப்பட்டது. அது குறித்த முடிவு விரைவில் பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட இருந்தது.

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ கூட்டம்

டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ள பிசிசிஐ கூடத்தில் மாநில கிரிக்கெட் அமைப்புகளின் ஒப்புதல் பெற்று இரண்டு ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்ய பிசிசிஐ முயலும் என கூறப்படுகிறது. ஆனால், அது நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

2021 ஐபிஎல் தொடர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்க வேண்டும். அந்த தொடரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடத்த வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் புதிய அணியை அறிமுகம் செய்வது தேவையா? நேரமே இல்லாமல் அவசரகதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக் காட்டி வருகின்றனர்.

மெகா ஏலம்

மெகா ஏலம்

இரண்டு அணிகள் அறிமுகம் செய்யப்பட்டால் மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும். அதற்கு கால அவகாசம் குறைவாகவே உள்ளது. ஜனவரி மாதம் ஏலம் நடக்க வாய்ப்பு இல்லை என கூறப்படும் நிலையில் மெகா ஏலத்துக்கு பின் ஐபிஎல் அணிகள் புதிய வீரர்களைக் கொண்டு திட்டம் தீட்டக் கூட நேரம் கிடைக்காது.

தயார் நிலை

தயார் நிலை

அதனால், ஐபிஎல் அணிகளின் தயார்நிலை வெகுவாக பாதிக்கப்படும் எனவே ஏற்கனவே உள்ள ஐபிஎல் அணிகளைக் கொண்டே தொடரை நடத்தவே பிசிசிஐ முடிவு எடுக்கும் என சில அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.

புதிய ஒப்பந்தம்

புதிய ஒப்பந்தம்

2021 ஐபிஎல் தொடருடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான ஒளிபரப்பு ஒப்பந்தம் நிறைவடைகிறது, 2022 ஐபிஎல் தொடர் முதல் புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்து புதிய ஒப்பந்தத்தில் அதிக தொகையை பெற முயற்சி செய்யலாம். அது பிசிசிஐக்கு அதிக லாபகரமான விஷயமாக இருக்கும்.

தாமதம்

தாமதம்

தற்போது பிசிசிஐ கூட்டத்தில் நிச்சயமாக புதிய ஐபிஎல் அணிகளை அறிமுகம் செய்ய ஒப்புதல் கிடைக்காது என கூறப்படுகிறது. ஓராண்டுக்கு அந்தா திட்டத்தை தள்ளி வைக்க பிசிசிஐ முடிவு செய்யலாம். 2021 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலமும் நடக்க வாய்ப்பு இல்லை.

Story first published: Friday, December 11, 2020, 12:10 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+