Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும்.." தோனியின் மிக மோசமான ஆட்டம்.. முதல்முறையாக மௌனம் கலைத்த கங்குலி!

டெல்லி: சிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் சரியாக இல்லாதது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமாக திணறி வருகிறது. மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வென்ற சிஎஸ்கே பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தது.

ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை மிக மோசமாக தோல்வி அடைந்தது. டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னையின் டெஸ்ட் இன்னிங்ஸ் காரணமாக சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

சென்னை அணியின் தோல்விக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் சென்னையின் மோசமான பேட்டிங். சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. முக்கியமாக ஓப்பனிங் வீரர்கள் மிக மோசமாக சொதப்புகிறார்கள். டு பிளசிஸ் மட்டுமே சென்னை அணியில் உயிரை கொடுத்த ஆடி வருகிறார்.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

சென்னை அணியின் தோல்விக்கு இரண்டாவது காரணம் தோனியின் கேப்டன்சி என்கிறார்கள்.தோனியிடம் பழைய கேப்டன்சி யுக்திகள் இல்லை. அவர் அடுத்து என்ன மூவ் எடுப்பார் என்று எளிதாக கணிக்க முடிகிறது. அவரிடம் புதிதாக யுக்திகள் எதுவும் இல்லை. இதனால் எதிரணியினர் எளிதாக அவரை கணித்து விடுகிறார்கள் என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

பேட்டிங்

பேட்டிங்

அதேபோல் தோனியின் பேட்டிங் மிக மோசமாக மாறி வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் ஆட சொன்னால் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார். மிக மோசமாக பேட்டிங் செய்கிறார். இனியும் தோனியை பினிஷர் தோனி என்று சொல்வது சரியில்லை. உடனே அவர் தனது பேட்டிங்கில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

தோனியின் பேட்டிங் குறித்து ஏற்கனவே கம்பீர் மற்றும் சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில்தான், தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், தோனியின் பேட்டிங் இப்போது சரியில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலையில் அவர் உடனே பார்மிற்கு திரும்ப முடியாது.

முடியாது

முடியாது

அவர் பார்மிற்கு திரும்ப இன்னும் நாட்கள் ஆகலாம். அவரின் பழைய பார்ம் இப்போது இல்லை. ஆனால் அவர் விரைவில் பார்மிற்கு திரும்புவார் என்று நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு வருடமாக கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் உடனே ஒரே நாளில் பார்மிற்கு திரும்ப முடியாது.

முக்கியமான வீரர்

முக்கியமான வீரர்

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கொஞ்ச நாள் கழித்தே பார்மிற்கு திரும்ப முடியும். தோனி பிரைம் டைமில் இருந்த போது அவர் 4வது இடத்தில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் இறங்கவில்லை. இப்போது அவர் 5வது இடத்திற்கு பின் பேட்டிங் செய்வதில் எந்த தவறும் இல்லை.. என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, September 29, 2020, 17:42 [IST]
Other articles published on Sep 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+