Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு புறக்கணிப்பு.. அரசியல்.. சென்னை மேட்சை பார்த்து கொதித்து போன கம்பீர்.. கடும் குற்றச்சாட்டு!

சார்ஜா: நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையே நடந்த போட்டியை பார்த்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பாஜக எம்பி கம்பீர் கொதித்து போய் உள்ளார்.

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. அதிலும் நேற்று சென்னை அணியின் பவுலிங்கை சஞ்சு சாம்சன் பறக்கவிட்டார். எல்லா திசைகளுக்கும் சிக்ஸர்களை பறக்க விட்டு சென்னை அணியை புரட்டி எடுத்தார்.

32 பந்துகளை மட்டுமே பிடித்த இவர் 74 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்ஸ் அடக்கம். இவர்தான் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேம் சேஞ்சராக இருந்தார்.

கம்பீர் ஆதரவு

கம்பீர் ஆதரவு

இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பாஜக எம்பி கம்பீர் களமிறங்கி உள்ளார். நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையே நடந்த போட்டியை பார்த்து இவர் கொதித்து போய் உள்ளார். அவர் கூறியதாவது, சஞ்சு சாம்சன்தான் தற்போது இந்திய கிரிக்கெட் உலகின் பெஸ்ட் கீப்பர்.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

அவர் பெஸ்ட் கீப்பர் மட்டுமல்ல சிறந்த பேட்ஸ்மேன். இந்திய கிரிக்கெட் உலகில் இருக்கும் இளம் வீரர்களில் அவர்தான் பெஸ்ட். இதை பற்றி என்னிடம் விவாதிக்க நினைப்பவர்கள் விவாதிக்கலாம். இந்திய அணியில் மட்டும்தான் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டிகளில் இருக்கும் பெரும்பாலான அணிகள் சஞ்சுவை எங்கள் அணிக்கு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் இந்திய அணியில் மட்டுமே அவரை எடுப்பது இல்லை. ஏன் இந்திய அணி மட்டும் அவரை அணியில் எடுக்க முனைவதில்லை என்று தெரியவில்லை, என்று கம்பீர் கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

பலர் ஆதரவு

பலர் ஆதரவு

கம்பீர் மட்டுமின்றி இன்னும் பலர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். தோனி ஓய்வு காரணமாக இந்திய அணியில் கீப்பர் இல்லை. இந்த இடத்தில் சஞ்சுவை எடுக்க வேண்டும். தோனிக்கு மாற்று பண்ட் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் சரியாக ஆடுவதில்லை. அவரிடம் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை.

சிறப்பாக ஆடுகிறார்

சிறப்பாக ஆடுகிறார்

ஆனால் சஞ்சு சிறப்பாக ஆடுகிறார். அதேபோல் நன்றாக கீப்பிங் செய்கிறார். அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. அவரை ஏன் இப்படி தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். இதற்கு பின் பெரிய அரசியல் இருக்கலாம். உடனே தேர்வு குழு சஞ்சுவை அணியில் எடுக்க வேண்டும். வேறு வழியே இல்லை, என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, September 23, 2020, 13:22 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+