Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல வருடமாக உருவாக்கியதை.. நொடியில் நொறுக்கிவிட்டனர்.. தினேஷ் கார்த்திக் முடிவு.. கம்பீர் கோபம்!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன்சி மாற்றப்பட்டது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி உள்ளார். பொதுவாக ஐபிஎல் தொடரில் பாதி தொடருக்கு இடையே கேப்டன்கள் பதவி விலக மாட்டார்கள்.

ஆனால் தினேஷ் கார்த்திக் அதிசயமாக பதவி விலகி உள்ளார். இந்த முடிவை சிலர் ஆதரித்து உள்ள நிலையில் இன்னும் சிலர் இதை கடுமையாக எதிர்த்து உள்ளனர்.

எதிர்ப்பு ஏன்

எதிர்ப்பு ஏன்

தினேஷ் கார்த்திக்கின் முடிவை இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் எதிர்த்து உள்ளனர். தினேஷ் கார்த்திக் நன்றாகவே கேப்டன்சி செய்து கொண்டு இருந்தார். அவர் இப்படி பதவி விலகி இருக்க கூடாது. அவர் அணியில் கேப்டன் பொறுப்பில் நீடித்து இருக்க வேண்டும்.

பாதியில் செல்ல கூடாது

பாதியில் செல்ல கூடாது

ஒரு தொடர் நடக்கும் போது கேப்டன்கள் பாதியில் மாற கூடாது. அது அணியை இன்னும் மோசமாக பாதிக்கும் என்று இர்பான் பதான் விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில்தான் தற்போது கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

கவுதம் கம்பீர் தனது விமர்சனத்தில், ஒரு பாரம்பரியத்தை உருவாக்க பல வருடங்கள் ஆகும். ஆனால் அதை உடைத்து நொறுக்க ஒரு நொடி போதும் என்று குறிப்பிட்டுள்ளார். பல வருடமாக கட்டி எழுப்பிய பாரம்பரியத்தை கொல்கத்தா அணி நொறுக்கிவிட்டது என்று மறைமுகமாக கம்பீர் குறிப்பிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

கம்பீர் இதில் நேரடியாக கொல்கத்தா அணியை விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அவர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் என்கிறார்கள். கம்பீர் தலைமையில் இரண்டு முறை கோப்பை வாங்கிய அணி கொல்கத்தா. ஆனால் அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட அணியில் தொடரின் பாதியில் கேப்டனை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கம்பீர் மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார் என்கிறார்கள்.

Story first published: Friday, October 16, 2020, 21:50 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+