Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் செய்ததில் என்ன தவறு? நடுவரை சீண்டிய தோனி.. சப்போர்டுக்கு வந்த பெரிய "கை".. இனி எதுக்கு விவாதம்!

துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி நடுவரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தோனிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி 19வது ஓவரில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிஎஸ்கே அணிக்காக நேற்று 19வது ஓவரை வீச ஷரதுல் தாக்கூர் களத்திற்கு வந்தார்.

அவர் வீசிய ஓவரில்தான் அந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில் ஷரதுல் வைட் போட்டார். பேட்ஸ்மேன் அடிக்க கூடாது என்பதால் தொடர்ந்து ஆப் திசையில் அகலமாக பந்துகளை வீசி வந்தார்.

களத்திற்கு வந்தார்

களத்திற்கு வந்தார்

19வது ஓவரில் ரஷீத் கான் பேட்டிங் செய்து வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தை ரஷீத் கான் அடிக்க முயன்றார். ஆனால் ஷர்துல் தாக்கூர் மீண்டும் பந்தை மிகவும் அகலமாக ஆப் திசையில் வீசினார். பந்து வைட் போல இருந்த காரணத்தால் களத்தில் இருந்த நடுவர் வைட் கொடுக்க சென்றார். கடைசி நொடியில் நடுவர் என்ன நினைத்தாரோ தனது முடிவை மாற்றினார்.

நடுவர் முடிவை மாற்றினார்

நடுவர் முடிவை மாற்றினார்

நடுவர் வைட் கொடுக்க சென்ற போது, அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷரதுல் தாக்கூர் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார். தோனியும் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார். எப்படி வைட் கொடுப்பீர்கள் என்பதை போல நடுவரை பார்த்து கோபமாக கத்தினார். இதனால் வைட் கொடுக்க சென்ற நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால் அதன்பின் காண்பிக்கப்பட்ட ரிப்ளேவில் பந்து வைட் கோட்டிற்கு வெளியே சென்றது தெரிய வந்தது. நடுவர் ஏன் தனது முடிவை மாற்றினார் என்று தெரியாத நிலையில் தோனிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் தோனி ஒரு கேப்டனாக செயல்பட்ட விதம் சரிதான் என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

என்ன சொல்கிறார்

என்ன சொல்கிறார்

இந்த நிலையில் தோனி செய்தது தவறு இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அதில், தோனி ஒரு கேப்டனாக அப்படி செயல்பட்டார். அவர் நடுவரை மிரட்டவில்லை. தனது அணிக்காக குரல் கொடுத்தார். அதற்கு முதல் ஓவரில்தான் பவுண்டரி, சிக்ஸர் சென்றது. இதனால் தோனி அப்படி குரல் கொடுத்தார்.

தவறு இல்லை

தவறு இல்லை

இதில் தவறு இல்லை. பேட்ஸ்மேன் கொஞ்சம் தள்ளி நின்று ஆடினார். இதனால் அது வைட் இல்லாமல் இருக்குமோ என்று நடுவரிடம் தோனி அப்படி செயல்பட்டார். இதை தவறு என்றெல்லாம் கூற முடியாது. போட்டியின் இறுதி இரண்டு ஓவர்கள் மிகவும் திரில்லாக இருந்தது என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கவாஸ்கரே இப்படி தோனிக்கு ஆதரவாக பேசிவிட்டதால்.. இனி இதில் விவாதத்தை தவிர்க்க வேண்டும் என்று தோனி ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Wednesday, October 14, 2020, 14:52 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+