Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர வைத்த ஹர்பஜன்.. வாய்ப்பு தந்த தோனியை பற்றி இப்படி பேசுவதா?.. மொத்தமாக முறியும் சிஎஸ்கே உறவு!

துபாய்: நேற்று சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து ஹர்பஜன் செய்த டிவிட் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெங்களூர், டெல்லி போன்ற அணிகள் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் உள்ளது.

எப்போதும் சிறப்பாக விளையாடும் சிஎஸ்கே இந்த முறை வரிசையாக தோல்விகளை தழுவி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே தற்போது ஒரு வெற்றி, மூன்று தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

கடைசி இடம்

கடைசி இடம்

சென்னை அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் என்றால் அது மோசமான பேட்டிங் ஆர்டர்தான். சென்னை அணியில் டு பிளசிஸ் , அம்பதி ராயுடு தவிர வேறு வீரர்கள் யாரும் பெரிதாக ஆடுவதில்லை. முக்கியமாக கேதார் ஜாதவ், வாட்சன் போன்ற வீரர்கள் ஒவ்வொரு முறையும் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக இருக்கிறார்கள்.

கடந்த போட்டி

கடந்த போட்டி

ஹைதராபாத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை நடந்த போட்டியிலும் சிஎஸ்கே மிக மோசமாக பேட்டிங் செய்தது. அந்த போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா இருவர் மட்டுமே பொறுப்பாக ஆடினார்கள். 3 விக்கெட்டுகள் விழுந்த பின் களமிறங்கிய தோனி கடைசி வரை சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று போராடினார். இதனால் அவருக்கு உடல் ரீதியாக பிரச்சனை வந்தது.

முடியவில்லை

முடியவில்லை

தோனி சிக்ஸ் அடிக்க முயன்றும் முடியவில்லை. அவரின் எனர்ஜி மொத்தமும் காலியாகி கடுமையாக சிரமப்பட்டார். அதிலும் நேற்று முதல்நாள் பாதி போட்டிக்கு பிறகு அவரால் மூச்சு விடவே முடியவில்லை. பாதியில் தண்ணீர் குடிக்கும் அளவிற்கு சென்றார். அதோடு பேட்டை கீழே ஊன்றி, மூச்சு வாங்கி ஓய்வு எடுத்தார். உடலில் நீர் சத்து குறைந்து இவர் கடுமையாக அவதிப்பட்டார்.

பாதன் டிவிட்

பாதன் டிவிட்

தோனி இப்படி உடல் ரீதியாக பிரச்சனை இருந்தும் அணியின் வெற்றிக்காக கஷ்டப்பட்டதை பலர் பாராட்டி உள்ளனர். இன்னொரு பக்கம் சிலர், தோனி விளையாட முடியவில்லை என்றால் அவர் ஓய்வு பெற வேண்டும். மாறாக இப்படி கஷ்டப்பட்டு ஆட கூடாது என்று விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள். முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இப்படி தோனியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பதான் என்ன சொன்னார்

பதான் என்ன சொன்னார்

இந்த நிலையில் நேற்று தோனியை, முன்னாள் வீரர் இர்பான் பதான் மறைமுகமாக விமர்சித்தார். அதில், சிலருக்கு வயது என்பது வெறும் எண்தான். ஆனால் இன்னும் சிலருக்கு அது அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது தோனி போன்ற வீரர்கள் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் என்னை எல்லாம் வயதை காரணம் காட்டி ஓய்வு பெற வைத்துவிட்டனர் என்பது போல மறைமுகமாக தாக்கி இருந்தார்.

தாக்குதல் ஏன்?

தாக்குதல் ஏன்?

இர்பான் பாதனின் ஓய்விற்கு தோனிதான் காரணம் என்று ஏற்கனவே நிறைய செய்திகள் உலவி வரும் நிலையில், தற்போது தோனியை இர்பான் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் இர்பான் சொல்வது சரிதான் என்று ஹர்பஜன் ஒப்புக்கொண்டுள்ளார். இர்பான் சொன்னதுடன் 10000000 ஒத்துப்போகிறேன் என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.

தோனி தாக்குதல்

தோனி தாக்குதல்

இர்பான் பதான் தோனியைதான் விமர்சனம் செய்கிறார் என்று தெரிந்தும் ஹர்பஜன் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஹர்பஜனுக்கு வாய்ப்பு கொடுத்ததே தோனிதான். ஆனாலும் இப்போது அதே தோனியை ஹர்பஜன் விமர்சனம் செய்துள்ளார். இந்த முறை சிஎஸ்கே அணிக்காக ஹர்பஜன் விளையாடவில்லை. இதற்கு அவர் குடும்ப காரணங்களை குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் உண்மை என்ன

ஆனால் உண்மை என்ன

ஆனால் தற்போது ஹர்பஜன் செய்யும் டிவிட்களை பார்த்தால் அவர் தோனி உடன் மோதலில் இருக்கிறார் என்று புலனாகிறது. இதனால்தான் அவர் இந்த முறை ஐபிஎல் தொடரில் ஆடவில்லை என்பதும் புலனாகிறது. இதனால் சிஎஸ்கேவில் வேறு எதோ பிரச்சனை உள்ளது. இதை உடனே சரி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Sunday, October 4, 2020, 9:26 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+