
என்ன நடந்தது
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கும் ஹர்பஜன் சிங் தற்போது சிஎஸ்கே குறித்தும், தோனி குறித்தும் அவ்வப்போது கிண்டலாக டிவிட் செய்து வருகிறார். முதலில் தோனியின் வயதை பதான் கிண்டல் செய்தார். அப்போது அதை ரீ டிவிட் செய்து.. உங்களுடன் ஒத்துப்போகிறேன் என்று ஹர்பஜன் சிங் தோனியை சீண்டி இருந்தார்.

வைரல்
ஹர்பஜன் சிங்கின் இந்த டிவிட் அப்போதே பெரிய அளவில் சர்ச்சையானது. அப்போதே தோனியின் ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தனர்.அதன்பின் மீண்டும் தோனியை ஹர்பஜன் சிங் தற்போது கிண்டல் செய்துள்ளார். ஹைதராபாத்திற்கு எதிரான துபாயில் நடந்த சிஎஸ்கே மேட்சின் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஹர்ப்ஜன் தோனியை கிண்டல் செய்துள்ளார்.

கிண்டல்
அந்த போட்டியில் ஷர்துல் தாக்கூர் வீசிய 19வது ஓவரில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்தது. 19வது ஓவரில் ரஷீத் கான் பேட்டிங் செய்து வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தை ரஷீத் கான் அடிக்க முயன்றார். ஆனால் ஷர்துல் தாக்கூர் பந்தை மிகவும் அகலமாக ஆப் திசையில் வீசினார். பந்து வைட் போல இருந்த காரணத்தால் களத்தில் இருந்த நடுவர் வைட் கொடுக்க சென்றார். கடைசி நொடியில் நடுவர் தனது முடிவை மாற்றினார்.

சர்ச்சை
நடுவர் வைட் கொடுக்க சென்ற போது, அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷரதுல் தாக்கூர் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார். தோனியும் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார். இதனால் கடைசி நொடியில் நடுவர் வைட் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த வீடியோவை ஹர்பஜன் சிங் ஷேர் செய்து.. சிரிக்க கூடிய ஸ்மைலிகளை வெளியிட்டு, தோனியை கிண்டல் செய்து இருந்தார்.

ஏன் இப்படி
தோனி ஒவ்வொரு போட்டிக்கும் பின் இளம் வீரர்களுக்கு நிறைய சொல்லித்தருகிறார், அனுபவத்தை பகிர்கிறார் என்று நேற்று ஒருவர் டிவிட் செய்து இருந்தார். அதற்கு வேறு ஒரு நபர்.. இந்த வீடியோவை கமெண்ட்டில் பதிவிட்டு.. இப்படித்தான் தோனி இளைஞர்களுக்கு பாடம் எடுக்கிறார் என்று தோனியை சீண்டி இருந்தார். இந்த டிவிட்டைதான் தற்போது ஹர்பஜன் ஷேர் செய்து கிண்டல் செய்துள்ளார்.

மோசமான நிலை
இந்த வீடியோவை இணையத்தில் பலர் பகிர்ந்து தோனியை கிண்டல் செய்து வருகிறார்கள். தோனிக்கு எதிராக கம்பீர், சேவாக், பதான் என்று பல வீரர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். தங்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிய தோனிதான் காரணம் என்று இவர்கள் கருதுகிறார்கள். ஹர்பஜனும் இப்படித்தான் கருதுகிறார் என்று சந்தேகம் வந்துள்ளது. அதிலும் சிஎஸ்கே அணியில் ஹர்பஜனுக்கு வாய்ப்பு கொடுத்த தோனியை அவர் இப்படி நடத்துவது பெரிய சர்ச்சையாகி உள்ளது.


Click it and Unblock the Notifications