For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வீரர்கள் செய்த துரோகம்.. "பிளான் பி" இல்லாமல் தவிக்கும் தோனி.. சிஎஸ்கேவின் சரிவு.. பரபர பின்னணி!

துபாய்: சிஎஸ்கேவில் இருந்து இரண்டு முக்கியமான வீரர்கள் விலகிய காரணத்தால் தற்போது அணிக்குள் பெரிய அளவில் பிரச்சனை நிலவி வருகிறது.

ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் கலக்கி வருகிறது. தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த ஹைதராபாத் அணி கூட பார்மிற்கு திரும்பி உள்ளது.

ஆனால் சென்னை இன்னும் தோல்வியில் இருந்து மீளவில்லை. வரும் வெள்ளிக்கிழமை வலுவான ஹைதராபாத் அணியை சென்னை எதிர்கொள்ள இருக்கிறது. ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

சென்னை அணியின் சிக்கல்

சென்னை அணியின் சிக்கல்

இந்த நிலையில் சென்னை அணியின் இரண்டு தீர்க்க முடியாத சிக்கல்கள் உள்ளது. இதை உடனே சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார் .

  • சிக்கல் 1- ரெய்னாவிற்கு இன்னும் சரியான மாற்று அணி இணையவில்லை.
  • சிக்கல் 2- ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை.
தீர்வு

தீர்வு

சென்னையின் அணியின் இந்த பிரச்சனையை தீர்க்க தோனி தீவிரமாக முயன்று வருகிறார். சிஎஸ்கேவில் இருந்து இரண்டு முக்கியமான வீரர்கள் விலகிய காரணத்தால்தான் தற்போது அணிக்குள் இந்த இரண்டு பிரச்சனையும் எழுந்துள்ளது. சிஎஸ்கேவில் இருந்து திடீர் என்று ரெய்னா விலகினார். குடும்ப காரணம் , அணி நிர்வாகத்துடன் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ரெய்னா அணியில் இருந்து விலகினார்.

மீண்டும் வர மாட்டார்

மீண்டும் வர மாட்டார்

இவர் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பவே வாய்ப்பு இல்லை என்கிறார்கள். போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் ரெய்னா இப்படி விலகியது சிஎஸ்கேவிற்கு பெரிய அடியாக மாறியது. மொத்தமாக சிஎஸ்கேவின் பிளான்களை எல்லாம் ரெய்னாவின் முடிவு உடைத்து போட்டது. ரெய்னாவின் இடத்தில் வேறு வீரர்களை இறக்க தோனியிடம் எந்த பிளானும் இல்லை. ரெய்னாவை தோனி மலை போல நம்பி இருந்தார்.

ரெய்னா ஏன்?

ரெய்னா ஏன்?

ரெய்னாவும் இனி சிஎஸ்கே திரும்ப வாய்ப்பே இல்லை. ரெய்னா அணியில் இருந்திருந்தால் வாட்சன் - முரளி விஜய்க்கு பின் ரெய்னா, டு பிளசிஸ், அம்பதி ராயுடு என்று சிறப்பான பேட்டிங் ஆர்டர் இருந்திருக்கும். ஆனால் ரெய்னா இல்லாத காரணத்தால் அந்த பேட்டிங் வலிமை போய் உள்ளது. இன்னொரு பக்கம் குடும்ப விஷயங்களை காரணம் காட்டி கடைசி நொடியில் ஹர்பஜன் சிங் அணியில் இருந்து விலகினார்.

சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

அமீரகத்தில் போட்டி நடக்கிறது என்பதால் தோனி முழுக்க முழுக்க ஹர்பஜன் சிங்கை வைத்துதான் திட்டங்களை வகுத்து இருந்தார். ஏனென்றால் சிஎஸ்கேவில் வாட்சன், டு பிளசிஸ், பிராவோ (அல்லது சாம் கரன்), பின் ஒரு வெளிநாட்டு ஸ்பீட் பவுலர் ஆடுவார் என்பதால்.. இம்ரான் தாஹிரை சேர்க்க முடியாது. வெளிநாட்டு வீரர்களுக்கான கோட்டா முடிந்துவிடும் என்பதால் ஹர்பஜன் சிங்கின் ஸ்பின் பவுலிங்கை வைத்து சமாளிக்க தோனி திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கடைசி நொடியில் ஹர்பஜன் வெளியேறிவிட்டார். இவருக்கு மாற்றாக இறங்கும் பியூஷ் சாவ்லா சரியாக பந்து வீசுவது இல்லை. விக்கெட் எடுத்தாலும் ரன் கொடுக்கிறார். 4 வெளிநாட்டு வீரர்கள் கட்டுப்பாடு காரணமாக இம்ரான் தாஹீரையும் எடுக்க முடியாது. இதனால் தோனி இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு சென்று உள்ளார்.

பிளான் பி

பிளான் பி

ஹர்பஜன் சிங்கிற்கு மாற்று இல்லாமல் தோனி கஷ்டப்பட்டு வருகிறார். இதை எல்லாம் தோனி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தோனியிடம் பெரிதாக பிளான் பி எதுவும் இல்லை. மீதம் உள்ள வீரர்களை வைத்துக்கொண்டு பிளான் பி போடுவதற்கு வாய்ப்பும் இல்லை என்கிறார்கள். வீரர்கள் பார்மிற்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் இருக்கிற வீரர்களை வைத்து போராட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, September 30, 2020, 22:18 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
IPL 2020: How 2 players changed the fate for CSK in this season.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+