Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி செய்த பெரும் தவறு.. கடைசி நொடியில் மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டர்.. சிஎஸ்கே தோற்றது இங்குதான்!

அபுதாபி: கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியின் பிளான் தோல்வி அடைந்ததுதான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று அபுதாபியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

இதனால் இந்த முறையும் சிஎஸ்கே சேசிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் அதிரடியாக ஆட தொடங்கிய கொல்கத்தா நேரம் செல்ல செல்ல சொதப்பியது.

சொதப்பல்

சொதப்பல்

வரிசையாக கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்க தொடங்கினார்கள். முதல் 10 ஓவரில் கொல்கத்தா 100 ரன்கள் எடுத்தாலும் போக போக கொல்கத்தா வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. இயான் மோர்கன், ராணா, ரசல், சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் என்று எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

பவுலிங்

பவுலிங்

சிஎஸ்கே பவுலிங்கும் போக போக சிறப்பாக இருந்தது. சாகர் தவிர மற்ற எல்லா பவுலர்களும் இன்று சிறப்பாக பவுலிங் செய்தனர். ஒரு பக்கம் கரன் சர்மா 2 விக்கெட் எடுத்தார். சரத்துல் தாக்கூர் இன்னொரு பக்கம் 2 விக்கெட் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதேபோல் சாம் கரனும் 2 விக்கெட் எடுத்தார். அதேபோல் கடைசியில் பிராவோவும் 2 விக்கெட் எடுத்தார்.

எத்தனை

எத்தனை

இதன் மூலம் கொல்கத்தா 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சிஎஸ்கேவில் இந்த முறையும் ஓப்பனிங் நன்றாகவே இருந்தது. வாட்சன் தொடக்கத்தில் இருந்து நன்றாக ஆடினார். முதலில் இன்னொரு பக்கம் டு பிளசிஸ் 10 பந்துகள் பிடித்து 3 பவுண்டரி அடித்து 17 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ஆனால் மாவி பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து டு பிளசிஸ் அவுட் ஆனார்.

அதிரடி

அதிரடி

அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு, வாட்சன் இருவரும் பார்னட்ஷிப் அமைத்து ஆடினார்கள். அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி வந்த நிலையில், தேவையில்லாத ஷாட் அடித்து அவுட்டானார். 27 பந்துகளில் பிடித்து 3 பவுண்டரி அடித்தவர் 30 ரன் பிடித்து அவுட்டானார்.

தோனி

தோனி

அதன்பின் ஜாதவ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி துணிந்து இறங்கினார். தோனி இந்த முறை பேட்டிங் ஆர்டரை மாற்றி 3 விக்கெட் விழுந்த பின் இறங்கி உள்ளார். ஆனால் 12 பந்துகள் பிடித்த தோனி ஒரே ஒரு பவுண்டரி அடித்து 11 ரன்களை மட்டுமே எடுத்தார். வாட்சன் அவுட் ஆன பின்பும் ஜாதவ் களமிறங்கவில்லை. மாறாக சாம் கரன் களமிறங்கினார்.

அதிரடி

அதிரடி

சாம் கரன் களத்திற்கு வந்து அதிரடியாக ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் இவரும் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். இதனால் எப்போதும் பழைய சிஎஸ்கே போட்டிகள் எவ்வளவு திரில்லாக் இருக்குமோ அதேபோல் மீண்டும் ஆட்டம் திரில்லாக இருந்தது. ஜாதவ், ஜடேஜா இருவரும் கடைசி கட்டத்தில் மிகவும் நிதானமாக ஆடினார்கள். கடைசி கட்டத்தில் தேவையில்லாமல் இருவரும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள்.

ஜாதவ் டென்ஷன்

ஜாதவ் டென்ஷன்

கடைசி கட்டத்தில் ஜாதவ் கடுமையான டென்ஷன் ஏற்றினார். தேவையில்லாத டாட் பால்களை வைத்து ஜாதவ் டென்ஷன் ஆக்கினார். கடைசியில் நரேன், ரசல் என்று 2 சிறப்பான பவுலர்களை கொல்கத்தா களமிறக்கியது. சிஎஸ்கேவும் பிராவோவை களமிறக்காமல் போனது. பேட்டிங் ஆர்டர் கடைசியில் சொதப்பியது . இது மொத்தமாக சிஎஸ்கேவிற்கு எதிராக போட்டியை கொண்டு சென்றது. இதனால் சிஎஸ்கே எளிதாக வெற்றி அடைய வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்தது.

Story first published: Wednesday, October 7, 2020, 23:34 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+