Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரண்டு போன பிளமிங்.. சிஎஸ்கேவின் ஆறு நாள் பிளானை.. ஒரே ஓவரில் காலி செய்த தமிழக வீரர்.. எப்படி?

துபாய்: சிஎஸ்கே அணி ஆறு நாட்களாக திட்டமிட்டு வந்த பிளானை ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் ஒரே ஓவரில் காலி செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகள் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும் என்று தோனியே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு சிஎஸ்கே அணியில் நிறைய பிரச்சனைகள் நிலவுகிறது.

பவுலிங்கில் நிலவி வந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் இன்னும் சிஎஸ்கே அணி சொதப்பி வருகிறது.

நாளை போட்டி

நாளை போட்டி

நாளை சென்னைக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் துபாய் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. நாளை கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. முன்னதாக நேற்றைய போட்டியில் வெல்ல வேண்டும் என்று சிஎஸ்கே தீவிரமாக பயிற்சி செய்தது.

6 நாட்கள்

6 நாட்கள்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் சிஎஸ்கேவிற்கு 6 நாட்கள் ஓய்வு கிடைத்தது. இந்த ஓய்வில் சிஎஸ்கே கடுமையாக பயிற்சி செய்தது. பிராவோ, ஷரத்துல், ராயுடு அணியில் வருவதற்காக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப கடுமையான பயிற்சிகளை சிஎஸ்கே மேற்கொண்டது. முக்கியமாக ஹைதராபாத் அணியின் பவுலிங்கை எதிர்கொள்வதற்காக தீவிரமாக பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பவுலிங்

பவுலிங்

ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் என்று இரண்டு ஜாம்பவான்களின் பவுலிங்கை எதிர்கொள்வதற்காக தீவிரமாக பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சிஎஸ்கே இதற்காக கடுமையான திட்டங்களை வகுத்ததாக பயிற்சியாளர் பிளமிங்கே ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சிஎஸ்கே வகுத்த திட்டங்களை எல்லாம் தமிழக வீரர் நடராஜன் நேற்று சுக்குநூறாக உடைத்து போட்டார். இவரின் மாஸ் பவுலிங்கிற்கு சிஎஸ்கே பெரிதாக தயார் ஆகவில்லை.

அனுபவம் இல்லை

அனுபவம் இல்லை

தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே முந்தைய சீசன்களில் சிஎஸ்கேவிற்கு வலை பயிற்சியில் பவுலிங் செய்து இருக்கிறார். ஆனால் இப்போது இவரின் பவுலிங் ஸ்டைல் மொத்தமாக மாறிவிட்டது. அதிலும் இவர் 6 பந்துகளிலும் யார்க்கர் போடும் அளவிற்கு மாஸ் பயிற்சி பெற்று புதிய வீரராக உருவெடுத்து உள்ளார். நேற்று இவரை குறைவாக எடை போட்டதும் கூட சிஎஸ்கேவின் பேட்டிங் சொதப்ப முக்கிய காரணம் என்கிறார்கள்.

நடராஜன்

நடராஜன்

சிஎஸ்கே அணி நேற்று முழுக்க முழுக்க ராயுடு, டு பிளசிஸ் ஆகியோரை நம்பி களமிறங்கியது. இதற்காக காயத்தில் இருந்து வெளியே வந்த ராயுடுவிற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கேவின் இந்த திட்டத்தை தமிழக வீரர் நடராஜன் ஒரே ஓவரில் காலி செய்தார்.இதில் நடராஜன் போட்ட 6வது ஓவர்தான் மொத்தமாக போட்டியை புரட்டி போட்டது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது.

இரண்டு விக்கெட்

இரண்டு விக்கெட்

அந்த ஓவரின் முதல் பந்திலேயே நடராஜன் புல் லென்தில் பந்து போட்டு, ராயுடு விக்கெட்டை எடுத்தார். ராயுடு தான் எப்படி அவுட் ஆகினோம் என்று கண்டுபிடிக்கும் முன் பெவிலியன் திரும்பினார். அதே ஓவரின் கடைசி பந்தில் டு பிளசிஸ் ரன் அவுட் ஆனார். இதுதான் சிஎஸ்கேவிற்கு சரிவை கொடுத்தது. ராயுடு விக்கெட்டை பார்த்து பிளமிங்கே மிரண்டு போனார்.

நடராஜன் எப்படி

நடராஜன் எப்படி

அதன்பின் நடராஜன் போட்ட 14 ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். 18வது ஓவரில் 19 ரன்கள் இவர் எடுத்தார். ஒரு பக்கம் இவர் ரன் செல்கிறது என்று கோபத்தில் இருந்தார். இதனால் மொத்தமாக ஸ்பீட் பவுலிங்கை மாற்றிவிட்டு ஸ்லோ பால் போட தொடங்கினார்.

பிளான் மாறியது

பிளான் மாறியது

யார்க்கருக்கு பதில் ஷார்ட் பந்துகளை போட தொடங்கினார். இவர் பிளான் மாறியதும் சிஎஸ்கே மொத்தமாக நிலைகுலைந்தது. அதே 18 ஓவரில்தான் இவர் ஜடேஜா விக்கெட்டையும் எடுத்தார். நேற்று சிஎஸ்கேவிற்காக ஜடேஜா மட்டுமே பேட்டை சுற்றினார். அவர் மட்டுமே கொஞ்சம் பார்மில் இருந்தார். ஆனால் அவரின் விக்கெட்டையும் நடராஜன் எடுத்தார்.

ஜடேஜா

ஜடேஜா

போட்டியின் போக்கை மொத்தமாக மாற்றியது இந்த நொடிதான். சிக்ஸ் அடித்து ஆட்டம் காட்டிய ஜடேஜாவிற்கு ஸ்லோவாக ஷார்ட் பால் போட்டு விக்கெட் எடுத்தார். சிஎஸ்கே ஆறு நாட்கள் பயிற்சி எடுத்தும் நடராஜனின் வித்தியாசமான பவுலிங் ஸ்டைலை அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. போட்டி மொத்தமாக கைவிட்டு போக நடராஜன் பெரிய காரணமாக இருந்தார்.

Story first published: Saturday, October 3, 2020, 20:27 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+