Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 3 பேரையும் காலி செய்துவிட்டார்.. நடராஜனை திரும்பி பார்த்த கோலி..இந்திய அணிக்குள் வந்தது எப்படி?

துபாய்: தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்குள் வந்தது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 தொடர் நடக்க உள்ளது.

இந்த மூன்று தொடருக்குமான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்திய அணியில் தற்போது சேலத்தை சேர்ந்த தமிழக வீரர் டி நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் விளையாடும் அணியில் சேர்க்கப்படவில்லை, 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்க்கப்படவில்லை, மாறாக அணியுடன் செல்லும் பவுலர்கள் பட்டியலில் நடராஜன் சேர்க்கப்பட்டு இருக்கிறார். கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் போரல், டி நடராஜன் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

என்ன செய்வார்கள்

என்ன செய்வார்கள்

இவர்களுக்கு ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது. ஆடும் அணியில் உள்ளவர்கள் காயம் அடைந்தாலும் கூட மாற்று வீரர்கள்தான் ஆடுவார்கள். நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நடராஜூனுக்கு இது மிக முக்கியமான தொடராக இருக்க போகிறது. காரணம் நடராஜன் இந்திய அணியின் பயிற்சி குழு மூலம் நேரடியாக் பயிற்சி அளிக்கப்படுவார்.

மைதானம்

மைதானம்

மைதானத்தில் இவர் நேரடியாக வலைபயிற்சியில் எல்லோருக்கும் பவுலிங் செய்வார். இவரின் எதிர்காலத்தை இந்த வலை பயிற்சிதான் மாற்ற போகிறது. வலைப்பயிற்சியில் இவர் சிறப்பாக பந்து வீசினால் இந்திய அணிக்குள்ளும் இவர் தேர்வாக வாய்ப்புள்ளது. இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் நடராஜனின் கிரிக்கெட் எதிர்காலத்தை மொத்தமாக மாற்ற போகிறது என்கிறார்கள்.

எப்படி

எப்படி

நடராஜனை இந்த பட்டியலில் தேர்வு செய்ய முக்கியமாக காரணம் உள்ளது. இவர் எடுத்த சில விக்கெட்டுகளும், இவர் செய்த சில ஓவர்களும்தான் இதற்கு காரணம். ஹைதராபாத் அணிக்காக இவர் டெத் ஓவர்களில் பவுலிங் செய்கிறார். டெத் ஓவர்களில் இவர் சில சமயம் ஆறு பந்திலும் யார்க்கர் வீசினார். டெத் ஓவர்களில் பெஸ்ட் எக்கனாமி கொண்ட வீரர்களில் இவரும் ஒருவர்.

இவர் எப்படி

இவர் எப்படி

இவர் 148 கிமீ வேகத்தில் ஆறு பந்தும் யார்க்கர் வீசியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பிரிட்லீயே இவரை பாராட்டி இருந்தார். பும்ரா, ஷமி கூட ஆறு பந்திலும் இவ்வளவு வேகமாக யார்க்கர் வீசியது கிடையாது. இதை பார்த்து கோலியே ஆச்சர்யப்பட்டு போய் உள்ளார். அதிலும் இந்த தொடரில் கோலி, தோனி, ரசல் என்று மூன்று பெரிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்திய ஒரே வீரர் இவர்தான்.

எப்படி

எப்படி

இதெல்லாம் போக இந்திய அணியில் இடம்பெறாமல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் வருண் சக்ரவர்த்தி உள்ளார். இந்த தொடரில் நடராஜன் மொத்தமாக ரஹானே, இஷான் கிஷன் , கோலி, ராணா, ஸ்டோய்னிஸ் , ராயுடு, ஜடேஜா, காட்ரல் , அர்ஷ்தீப் சிங் , வாட்சன், தோனி, ரசல் , ராகுல் திரிபாதி என்று பெரிய பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

செம

செம

இதை எல்லாம் பார்த்து ஆடிப்போன கோலி, நடராஜனை அணியில் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் நடராஜன் ஆடும் அணிக்கு கூட தேர்வாக வாய்ப்புள்ளது. சைனி சொதப்பும் பட்சத்தில் நடராஜன் உள்ளே வர வாய்ப்புகள் உள்ளது.. சேலத்தில் குக்கிராமத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் யார்க்கர்களை வீச செல்லும் நடராஜனுக்கு வாழ்த்துகள் பாஸ்!

Story first published: Tuesday, October 27, 2020, 9:13 [IST]
Other articles published on Oct 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+