Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடராஜன் செய்த காரியம்.. கொக்கி போட்டு தூக்கிய கேப்டன் கோலி.. இந்திய அணியில் இடம் பிடித்தது எப்படி?

துபாய்: தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரின் பவுலிங்கை பார்த்து கோலி வியந்து போய் உள்ளார்.

தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளார். ஆஸ்திரேலியா செல்லும் இந்தியாவின் டி 20 அணியில் நடராஜன் இடம் பிடித்துள்ளார்.

தமிழக வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால்.. அவர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

நடராஜன் ஏன்

நடராஜன் ஏன்

இந்திய அணியில் நடராஜன் இடம் பிடிக்க காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. இவரின் சிறப்பான டெத் ஓவர் பவுலிங் மற்றும் துல்லியமான யார்க்கர்தான் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க காரணம் என்கிறார்கள். இந்த சீசன் முழுக்க இவர் 63 யார்க்கர் பந்துகளை போட்டுள்ளார்.

பும்ரா

பும்ரா

பும்ரா, ரபாடா உள்ளிட்ட எந்த வீரரும்.. இந்த சீசனில் இத்தனை யார்க்கர் பந்துகளை வீசியது இல்லை. துல்லியமான வேகத்தில் , மிக சிறப்பாக யார்க்கர் பந்துகளை இவர் வீசி வருகிறார். இவரின் யார்க்கர் பந்துக்களை பலரும் பாராட்டிய நிலையில், தற்போது இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோலி

கோலி

இவரின் பவுலிங்கை பார்த்து கோலி வியந்து போய் உள்ளார். இன்னொரு நடராஜன் மிகவும் சிறப்பாக டெத் ஓவர்களை வீசி வருகிறார். பும்ராவிற்கு நிகராக இவர் டெத் ஓவர்களில் பவுலிங் செய்கிறார். ஆறு பாலும் யார்க்கர் போட்டு நடராஜன் டெத் ஓவர்களில் ரன் செல்வதை கட்டுப்படுத்துகிறார். இவரும் பும்ராவும் சேர்ந்து கடைசி 6 ஓவர்களை வீசினால் சிறப்பாக இருக்கும்.

ஜோடி

ஜோடி

இவர்கள் இருவரின் ஜோடி மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால்.. நடராஜனை இந்திய அணியில் எடுத்துள்ளனர். அதேபோல் இந்த தொடரில், ரசல், கோலி, தோனி, ஏபிடி வில்லியர்ஸ் என்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை நடராஜன் எடுத்துள்ளார். இவரின் பவுலிங்கில் ஜாம்பவான் வீரர்களே ஆட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பிசிசிஐ

பிசிசிஐ

இவரின் திறமையை பார்த்து பிசிசிஐ மலைத்து போய் உள்ளது. இதனால்தான் உடனே இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஆகவேதான் ஸ்பின் பவுலர் வருண் சக்கரவர்த்திக்கு மாற்றாக வேறு ஸ்பின் பவுலரை எடுக்காமல்.. ஸ்பீட் பவுலர் நடராஜனை அணியில் எடுத்துள்ளனர்.

Story first published: Monday, November 9, 2020, 20:13 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+