Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டியை விட்டு வெளியே போங்க.. ஜாம்பவான் டீமை சீண்டிய சேவாக்.. அடுத்து நடந்த திருப்பம்.. இது தேவையா?

ஷார்ஜா: ஐபிஎல் தொடரில் முக்கியமான டீம் ஒன்றை சீண்டி தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமீரகத்தில் இருக்கும் மூன்று மைதானங்களில் போட்டிகள் மாறி மாறி நடந்து வருகிறது.

அதிலும் சார்ஜா மைதானம் மிக சிறியதாக இருப்பதால் அங்கு நடக்கும் போட்டிகள் மிகவும் சுவாரசியமாக அமைந்துள்ளது. இங்கு எப்போதும் அணிகள் 200க்கும் அதிகமான ரன்களை அடிக்கிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்தநிலையில்தான் கடந்த 4ம் தேதி ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. கண்டிப்பாக இந்த ஆட்டமும் 200+ ரன்களை தாண்டி செல்லும் என்று கணிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கும் இதே கணிப்பைதான் வெளிப்படுத்தி இருந்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதன்படி ஷார்ஜாவில் மும்பை அணி பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும். அந்த அணி கண்டிப்பாக 200+ ரன்களை எடுக்கும். ஆனால் ஹைதராபாத் 200+ ரன்களை எடுக்க கூடிய திறமை கொண்ட அணி கிடையாது.ஹைதராபாத் அணி நினைத்தால் 150+ ரன்களை மட்டுமே அடிக்க முடியும்.

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணியிடம் சிறப்பான பேட்ஸ்மேன்கள் இல்லை. அவர்களால் இவ்வளவு பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது. இதனால் ஹைதராபாத் அணி மும்பையிடம் மோத கூடாது. மாறாக மொத்தமாக அந்த போட்டியில் இருந்து விலக வேண்டும். மும்பைக்கு வெற்றி கொடுத்துவிட்டு விலக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கிண்டல்

கிண்டல்

இவரின் பேச்சு பெரிய சர்ச்சையானது. அந்த போட்டியில் மும்பையின் 208 டார்கெட்டை அடிக்க முடியாமல் ஹைதராபாத் தோல்வி அடைந்தது உண்மைதான். ஆனால் அதன்பின் நேற்று நடந்த பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 201 ரன்கள் எடுத்தது. அதிலும் பெரிய மைதானமான துபாய் மைதானத்தில் ஹைதராபாத் 200+ ரன்களை எடுத்தது.

எத்தனை

எத்தனை

நேற்று ஹைதாராபாத் அணிக்காக ஆடிய ஜானி பிரைஸ்டோ வெறும் 55 பந்துகள் பிடித்த அவர் 97 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் அடக்கம். அதேபோல் வார்னர் 57 ரன்களும், வில்லியம்சன் 20 ரன்களும் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் 20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தது.

அதன்பின்

அதன்பின்

அதன்பின் இறங்கிய பஞ்சாப் அணியில் நிகோலஸ் பூரான் மட்டும் அதிரடியாக ஆடினார். ஆனால் பஞ்சாப் அணியில் வேறு யாரும் சரியாக ஆடாத நிலையில் அந்த அணி 16.5 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மற்ற அணிகள் சார்ஜா மைதானத்தில் 200+ ரன்களை அடிக்கும் போது ஹைதராபாத் அணி துபாய் மைதானத்தில் அந்த சாதனையை செய்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்து இருக்கிறது.

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

சின்ன மைதானத்தில் பாய்ச்சல் காட்டாமல் பெரிய மைதானத்திலேயே ஹைதராபாத் கலக்கியது. இதன் மூலம் சேவாக்கின் விமர்சனத்திற்கு ஹைதராபாத் அணி மாஸ் பதிலடி கொடுத்துள்ளது. போட்டியை விட்டு போங்க, உங்க கிட்ட பேட்ஸ்மேன் இல்லை என்று கூறிய சேவாக்கிற்கு ஒரே போட்டியில் வார்னரின் டீம் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் சேவாக்கிடம் பலர் 'இது உங்களுக்கு தேவையா.. "என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Story first published: Friday, October 9, 2020, 16:38 [IST]
Other articles published on Oct 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+