Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவறுகளுக்கு காரணம்.. தோல்விக்கு நானே பொறுப்பு.. ஒப்புக்கொண்ட கோலி.. விரைவில் முக்கிய முடிவு?

துபாய்: பெங்களூர் அணியின் தோல்விக்கு நானே பொறுப்பேற்க விரும்புகிறேன், விமர்சனங்களை நான்தான் ஏற்க வேண்டும் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை வெற்றியோடு தொடங்கிய பெங்களூர் மீண்டும் தோல்வி பாதைக்கு சென்றுள்ளது. ஹைதராபாத்திற்கு எதிரான முதல் போட்டியை வென்ற நிலையில் நேற்று பஞ்சாப்பிடம் பெங்களூர் தோல்வி அடைந்தது.

நேற்று முதலில் ஆடிய பஞ்சாப் அணி 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி 17 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பேட்டி கொடுத்தார்

பேட்டி கொடுத்தார்

இது தொடர்பாக கோலி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் தொடக்கத்தில் மோசமாக ஆடினாலும், போட்டியின் நடுவில் பந்து வீசும் போது கொஞ்சம் நன்றாக ஆடினோம். ஆட்டம் எங்கள் கையில் இருந்தது. அதன்பின் ஆட்டம் கையை விட்டு போய்விட்டது. இந்த தவறுகளுக்கு நான்தான் காரணம்.

நான்தான் பொறுப்பு

நான்தான் பொறுப்பு

இந்த தவறுகளுக்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும். என் அணிக்கு முன் நின்று, நான்தான் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். தோல்விக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். 30-40 ரன்கள் தேவையில்லாமல் சென்றுவிட்டது. 180 ரன்களுக்கு பஞ்சாப்பை சுருட்டி இருந்தால் எங்களுக்கு இவ்வளவு அழுத்தம் இருந்திருக்காது.

எங்கள் கட்டுப்பாடு

எங்கள் கட்டுப்பாடு

போட்டியும் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். இப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். தோல்வியை ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல வேண்டும். ஒரு போட்டி எங்களுக்கு சாதகமாக இருந்தது. இன்னொரு போட்டி எங்களுக்கு எதிராக இருந்தது. வெற்றி தோல்வியை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சிறிய சிறிய தவறு

சிறிய சிறிய தவறு

சிறிய சிறிய தவறுகளை சரி செய்ய வேண்டும். இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் நாங்கள் நன்றாக ஆடி இருக்கலாம். நான்தான் அணியை முன்னின்று வழி நடத்தி இருக்க வேண்டும். இது சரியான நாள் இல்லை. நன்றாக தொடங்கினோம். ஆனால் கடைசியில் எதிரணிக்கு பிரஷர் கொடுக்க முடியாமல் போய்விட்டது.

பவுலிங் பேட்டிங்

பவுலிங் பேட்டிங்

எங்கள் அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அணியில் சில திட்டங்களை மாற்ற வேண்டும். அதிக ஸ்கோர்களை சேஸ் செய்யும் போது கவனமாக ஆட வேண்டும். பஞ்சாப் அணி சிறப்பான பிளானுடன் விளையாடி வருகிறது. பின்ச் இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடி இருக்கலாம், என்று கோலி தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கோலி பேட்டி அழுத்தம்

கோலி பேட்டி அழுத்தம்

கோலி இப்படி தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அழுத்தம் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோலியின் இந்த பேட்டி, கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகும் முடிவில் இருக்கிறாரா என்ற கேள்வியை, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, September 25, 2020, 10:57 [IST]
Other articles published on Sep 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+