Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாட முடியாத நிலையில் பிராவோ.. சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..நாளை அணிக்குள் வரும் மாஸ் வீரர்

துபாய்: சிஎஸ்கே அணியில் பிராவோ விளையாட முடியாத அளவிற்கு காயம் அடைந்து இருப்பதால் அடுத்த போட்டியில் அவரின் இடத்தில் யார் ஆட போவது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கே அணியில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. 2020 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்புதான் மூத்த வீரர் ரெய்னா தொடரில் இருந்து வெளியேறினார்.

ரெய்னாவை தொடர்ந்து தொடரில் இருந்து ஹர்பஜனும் வெளியேறினார். இதனால் மொத்தமாக சிஎஸ்கே அணி துவண்டு போனது. போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் காலியானது.

திட்டம்

திட்டம்

இவர்கள் இருவரும் வெளியேறிய காரணத்தால் அணிக்குள் டு பிளசிஸ் நிரந்தர வீரராக மாறினார். ரெய்னா அணியில் இருந்தால் வாட்சன், ராயுடு ஓப்பனிங் இறங்குவார்கள். அதன்பின் ரெய்னா களமிறங்குவார். ஆனால் இந்த முறை ரெய்னா இல்லாத காரணத்தால் டு பிளசிஸ் நிரந்தரமாக அணியில் இடம் பிடித்தார்.

எப்படி

எப்படி

ஒரு பக்கம் டு பிளசிஸ் நிரந்தரமாக விளையாடுவது போல வாட்சனும் அணிக்கும் முக்கியமான ஓப்பனிங் வீரராக மாறிவிட்டார். அதோடு சாம் கரன் சிறப்பாக விளையாடி வருகிறார். நன்றாக ஓப்பனிங் செய்கிறார் . நன்றாக பவுலிங் செய்கிறார். அதேபோல் பீல்டிங்கும் சிறப்பாக செய்கிறார். இதனால் இவரையும் நீக்க முடியாது.

பிராவோ

பிராவோ

சிஎஸ்கே அணிக்குள் பிராவோவின் இடம் மட்டுமே கேள்விக்குறியாக இருந்தது. அவர் சிறப்பாக டெத் ஓவர்களில் பவுலிங் செய்து வந்தார். தேவையான நேரங்களில் இவர் பேட்டிங்கும் செய்வார் என்பதால் பிராவோவை அணியில் இருந்து நீக்குவார்களா என்று சந்தேகம் வந்தது. ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை.

ஸ்பின்

ஸ்பின்

கரண் சர்மா,சாவ்லா இரண்டு பேருமே சரியாக ஸ்பின் பவுலிங் செய்வது இல்லை. இதன் காரணம் சிஎஸ்கே அணியில் இம்ரான் தாஹிரை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அணியில் பிராவோ இருப்பதால் தாஹிரை கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது பிராவோ விளையாட முடியாத அளவிற்கு காயம் அடைந்து உள்ளார். இதனால் அடுத்த போட்டியில் பிராவோவின் இடத்தில் தாஹிர் விளையாட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தகவல்

தகவல்

நேற்று நடந்த போட்டியில் பிராவோ காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இவர் மீண்டு வர இன்னும் இரண்டு வாரம் கூட ஆகும் என்று பிளமிங் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாளை அணிக்குள் இம்ரான் தாஹிர் விளையாடுவது உறுதியாகி உள்ளது. நாளை சிஎஸ்கேவில் பிராவோ இடத்தில் இம்ரான் தாஹிர் ஆடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தாஹிர்

தாஹிர்

தாஹிர்தான் கடந்த இரண்டு சீசன்களில் சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இந்த நிலையில் நாளை அவர் அணிக்குள் வர உள்ளார். நாளை ராஜஸ்தானுக்கும், சிஎஸ்கேவிற்கும் இடையே ஆட்டம் நடக்க உள்ளது. இதில் சிஎஸ்கே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நாளை இம்ரான் தாஹிர் ஆட்டம் அதிகம் கவனிக்கப்படும்.

Story first published: Sunday, October 18, 2020, 13:29 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+