சிஎஸ்கேதான் முக்கியம்.. கூல்டிரிங்ஸ் சுமப்பதில் என்ன தவறு? உயர்ந்து நின்ற தாஹிர்.. என்ன மனுஷன்யா!!
துபாய்: சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படுவது குறித்து மூத்த வீரர் இம்ரான் தாஹிர் அருமையான டிவிட் ஒன்றை செய்துள்ளார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மற்ற அணியில் இருக்கும் வீரர்கள் புலம்பும் போது இம்ரான் தாஹிர் அதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலும் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் அணியில் மிகப்பெரிய ஜாம்பவான் வீரர்கள் இருந்தாலும் கூட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.
சிஎஸ்கே அணியிலும் இதே 4 வீரர்கள் கட்டுப்பாடு காரணமாக சாண்ட்னர், இம்ரான் தாஹிர், லுங்கி நிகிடி போன்ற வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லுங்கி நிகிடி போன்ற வீரர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

நிலைமை என்ன
நிலைமை இப்படி இருக்க, சிஎஸ்கேவில் இருக்கும் இம்ரான் தாஹிருக்கு இந்த சீசனில் கடந்த 8 போட்டிகளாக வாய்ப்பே கிடைக்கவில்லை. கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு டாப் விக்கெட் டேக்கர் இம்ரான் தாஹிர்தான். அவர்தான் கடந்த சீசனில் சிஎஸ்கே பைனல்ஸ் வரை செல்ல முக்கியமான காரணமாக இருந்தார். ஆனால் இந்த முறை அவரால் விளையாட முடியவில்லை.

ஏன் முடியவில்லை
அணியில் ஏற்கனவே வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் உள்ளனர். வாட்சன் , டு பிளசிஸ் இருவரும் முக்கியமான வீரர்கள் என்பதால் அவர்களை நீக்க முடியாது. சாம் கரன் ஓப்பனிங் இறங்க கூடிய ஆல் ரவுண்டர் என்பதால் அவரையும் நீக்க முடியாது. அதோடு பிராவோ டெத் ஓவர்களில் தேவை என்பதால் அவரையும் நீக்குவது கடினம்.

அணியில் இடம் இல்லை
இதனால் இம்ரான் தாஹிருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது சிஎஸ்கே வீரர்களுக்கு போட்டியின் இடையில் கூல் டிரிங்ஸ் கொடுக்கும் பணிகளை இம்ரான் தாஹிர் செய்து வருகிறார். இவர் கையில் கூல் டிரிங்ஸ் பைகளை சுமந்து செல்வது இணையத்தில் சர்ச்சையாகி உள்ளது. இவ்வளவு பெரிய மேட்ச் வின்னரை கூல்டிரிங் சுமக்க வைப்பது தவறு என்று பலரும் டிவிட் செய்து இருந்தனர்.

விளக்கம்
இந்த நிலையில் தான் கூல்டிரிங்ஸ் சுமந்து செல்வது குறித்து இம்ரான் தாஹிர் டிவிட் செய்துள்ளார். அதில், நான் கிரிக்கெட் விளையாடும் நேரங்களில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு தண்ணீர், கூல் டிரிங்ஸ் கொண்டு வருவார்கள். இப்போது களத்தில் தகுதியான வீரர்கள் ஆடிக்கொண்டு இருக்கும் போது, அவர்களுக்காக நான் தண்ணீர் கொண்டு செல்கிறேன். இதில் என்ன தவறு.

என்னுடைய கடமை
அவர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்னுடைய கடமை. நான் விளையாடுகிறேனா, இல்லையா என்பது இங்கு பிரச்சனையே இல்லை. என்னுடைய டீம் வெற்றிபெறுகிறதா இல்லையா என்பதே முக்கியம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் நன்றாக ஆடுவேன்.. ஆனால் அதை விட எனக்கு என் டீம்தான் முக்கியம், என்று இம்ரான் தாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் குறிப்பிட்டார்
இந்த நிலையில் இம்ரான் தாஹரின் இந்த கருத்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இம்ரான் தாஹிரை பாராட்டி வருகிறார்கள். அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் மனிதர் உயர்ந்துவிட்டார். ஹர்பஜன் சிங் போன்ற ஆட்கள் திமிராக பேசும் போது.. இம்ரான் தாஹிர் இப்படி பேசுவதை கேட்கவே சந்தோசமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது என்று பலர் டிவிட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications