Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரின் ஆட்டமே இனிதான்.. பொறுத்திருங்கள்.. ஜாம்பவானை இறக்குகிறது சிஎஸ்கே.. சிஇஓ அதிரடி தகவல்!

துபாய்: சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் விரைவில் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தடுத்து ஐபிஎல் போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றி சிஎஸ்கே அணிக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது. மீண்டும் தொடர் வெற்றிகளை குவிக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டு வருகிறது.

பவுலிங்

பவுலிங்

சிஎஸ்கே அணியில் எப்போதும் ஸ்பின் பவுலிங்தான் பலமானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே கோப்பை வெல்லவும், இறுதி போட்டிக்கு செல்லவும் ஸ்பின் பவுலிங்தான் காரணமாக இருந்தது.கடந்த இரண்டு சீசன்களிலும் சிஎஸ்கேவின் ஸ்பின்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடக்கிறது. இதன் காரணமாக தற்போது வரை சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை. பிட்ச் போதிய அளவு உலர்ந்து இல்லாத காரணத்தால் பெரிய அளவில் பந்து ஸ்விங் ஆவது இல்லை. இதனால் சிஎஸ்கேவின் கரன் சர்மா, பியூஸ் சாவ்லா இருவரும் பெரிய அளவில் விக்கெட் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இல்லை

இல்லை

அணியில் இன்னொரு ஜாம்பவான் ஸ்பின் பவுலர் இருக்கிறார். அவர்தான் இம்ரான் தாஹிர். கடந்த ஐபிஎல் சீசனில் இவர்தான் அதிக விக்கெட் எடுத்த வீரர். ஆனால் இந்த முறை இவரால் சிஎஸ்கே அணியில் களமிறங்க முடியவில்லை. வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே விளையாட முடியும் என்பதாலும், வாட்சன், டு பிளசிஸ், சாம் கரன், பிராவோவை நீக்க முடியாது என்பதாலும் தாஹிருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு வரும்

வாய்ப்பு வரும்

ஆனால் இம்ரான் தாஹிர் விரைவில் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இம்ரான் தாஹிர் கண்டிப்பாக விரைவில் சிஎஸ்கே அணிக்காக ஆடுவார். அவரின் ஆட்டமே இனிதான் இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

பிட்ச் மாறும்

பிட்ச் மாறும்

தற்போது பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இல்லை. விரைவில் பிட்ச் மாறும். போக போக பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றம் அடையும். அப்போது இம்ரான் தாஹிர் சிஎஸ்கே அணிக்காக களமிறங்குவார் என்று அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் அணியில் தாஹிர் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, October 15, 2020, 20:41 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+