Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் பெரிய ஸ்டேடியத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி.. பிசிசிஐ அதிரடி.. வெளியான தகவல்

மும்பை : அஹ்மதாபாத்தின் மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

Recommended Video

India வீரர்களுக்கு Motera stadium-ல் பயிற்சி கொடுக்க BCCI திட்டம்

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மொடேரா மைதானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ள சூழ்நிலைகளில் அங்கே பயிற்சி முகாமை நடத்துவது வசதியானது என கருதுகிறது பிசிசிஐ.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2020 ஐபிஎல் தொடரில் ஆட தயார் ஆகி வருகின்றனர். தற்போது வீரர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே சிறிய அளவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பிசிசிஐ பெரிய அளவில் பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு வருகிறது.

வெளிநாட்டில் ஐபிஎல்

வெளிநாட்டில் ஐபிஎல்

செப்டம்பர் இறுதியில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்க வேண்டும், இந்திய அரசு அனுமதி கிடைக்க வேண்டும் என்பதால் அந்த முடிவு தாமதமாகி வருகிறது.

வெப்பம்

வெப்பம்

இதற்கு முன் ஒரு மாத பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என கருதுகிறது பிசிசிஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் வெப்பம் அதிகமாக இருக்கும். அப்போது அங்கே பகல் வேளையில் பயிற்சி செய்தால் வீரர்கள் சோர்வடைந்து விடும் சிக்கல் உள்ளது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

அதனால், இந்தியாவிலேயே பயிற்சி முகாமை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. வெப்பம் மட்டுமின்றி, ஐசிசி டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்காமல் இருப்பதும் ஒரு காரணம். அந்த அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் தொடருக்கான திட்டமிடலை செய்ய முடியாது.

இந்தியாவில் பயிற்சி

இந்தியாவில் பயிற்சி

ஆனால், இடைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் பயிற்சி முகாமை நடத்தி விட முடியும். தரம்சாலா அல்லது அஹ்மதாபாத்தில் பயிற்சி முகாமை நடத்த இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. அதில் அஹ்மதாபாத்தில் உள்ள மொடேரா மைதானத்தில் முகாமை நடத்தவே பிசிசிஐ அதிகம் முயற்சித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

டிரம்ப் திறந்து வைத்தார்

டிரம்ப் திறந்து வைத்தார்

கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் விதிக்கப்பட்டதற்கு சில வாரங்கள் முன்பு தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரம்மாண்டமான விழாவில், ஒரு லட்சம் பேருக்கு நடுவே பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து அந்த மைதானத்தை திறந்து வைத்து இருந்தார்.

வசதிகள்

வசதிகள்

சுமார் 1,10,000 பேருக்கும் மேல் அமரும் வசதி கொண்ட அந்த மைதானத்தில் பல நவீன வசதிகளும் உள்ளன. உள்ளேயே இருக்கும் கிளப்ஹவுசில் 60 வீரர்கள் வரை தங்க முடியும். மேலும், வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியே வராமல் உள்ளேயே அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

அனுமதி

அனுமதி

இது குறித்து இன்னும் அணி நிர்வாகம் மற்றும் இந்திய வீரர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என கூறப்படுகிறது. பயிற்சி முகாம் நடத்த மத்திய அரசிடம் விரைவில் பிசிசிஐ அனுமதி கேட்கும் எனவும், அனுமதி கிடைத்த பின் இது பற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும்.

Story first published: Sunday, July 19, 2020, 17:34 [IST]
Other articles published on Jul 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+