Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலியாகும் தோனியின் இடம்.. தினேஷ் கார்த்திக் போட்ட பக்கா பிளான்.. ராஜினாமா முடிவிற்கு பரபர காரணம்!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்ய காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை நேற்று தினேஷ் கார்த்திக் திடீர் என்று ராஜினாமா செய்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு தினேஷ் கார்த்திக் ஒதுங்கி சென்றுள்ளார்.

தொடக்கத்தில் சொதப்பினாலும் போக போக தினேஷ் கார்த்திக் கேப்டன்சி நன்றாகவே இருந்தது. தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்த 7 போட்டிகளில் கொல்கத்தா 4 போட்டிகளில் வென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி உள்ளார்.

விலகினார்

விலகினார்

தனது பேட்டிங் மீதும் தனிப்பட்ட ஆட்டம் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தினேஷ் கார்த்திக் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.கேப்டனாக இருப்பதால் தனிப்பட்ட பேட்டிங் மீது அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் தற்போது கேப்டன்சியை துறந்து இருக்கிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தினேஷ் கார்த்திக் இப்படி கேப்டன்சியை துறக்க முக்கியமான காரணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். தற்போது இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் தோனியின் கீப்பிங் இடமும், 5வது பேட்டிங் பொசிஷனும் காலியாக உள்ளது. இந்த இடத்தில் யார் இறங்குவார் என்று கேள்வி உள்ளது.

போட்டி

போட்டி

தற்போது தோனியின் இடத்தை நிரப்ப கடுமையான போட்டி நடந்து வருகிறது. கே. எல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன் என்று பெரிய பட்டாளமே தோனியின் இடத்தை நிரப்ப போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் யார் கீப்பராக இருக்க போவது என்று போட்டி நிலவி வருகிறது.

நிரூபிக்க வேண்டும்

நிரூபிக்க வேண்டும்

இதனால் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். இவருக்கு ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில்தான் தன்னை நிரூபிக்க வேண்டும். ஆனால் கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க முடியாமல் தினேஷ் கார்த்திக் திணறுகிறார்.

காரணம்

காரணம்

இதனால்தான் எப்படியாவது தன்னை ஒரு பேட்ஸ்மேனாக நிரூபிக்க தினேஷ் கார்த்திக் முடிவு செய்துள்ளார். தோனியின் இடத்தை நிரப்ப திட்டமிட்ட தினேஷ் கார்த்திக் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள். இதன் காரணமாகவே கேப்டன் பதவியை துறந்துவிட்டார். அதோடு 4வது இடத்திலும் பேட்டிங் இறங்கி உள்ளார். இனி கொல்கத்தா ஆட உள்ள மீதமுள்ள 6 போட்டிகளில் கண்டிப்பாக அதிரடி ஆட்டம் ஆட வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.

Story first published: Saturday, October 17, 2020, 10:39 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+