For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது பிளானில் இல்லையென்றால் ஏன் செய்ய வேண்டும்.. தோனி எடுத்த முடிவு.. பிளமிங் என்ன இப்படி பேசுகிறார்?

துபாய்: நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு தோனி கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் நேற்று சிஎஸ்கே தோல்வி அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்வதே சந்தேகம் ஆகியுள்ளது.

நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய டெல்லி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

ஜடேஜா

ஜடேஜா

இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைய ஜடேஜா கடைசி ஓவர் போட்டதும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த போட்டியில் பிராவோ காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அடி வயிற்றிலும், பின்பக்கம் கால் பகுதியிலும் ஏற்பட்ட காயம் காரணமாக பிராவோ பாதியில் வெளியேறினார் .

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இதன் காரணமாக ஜடேஜா நேற்று கடைசி ஓவரை வீசினார். நேற்று ஜடேஜா ஓவர் போட்ட போது தவான், அக்சர் பட்டேல் என்று இரண்டு பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தனர். இரண்டு பேருமே இடதுகை பேட்ஸ்மேன்கள். இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும் போது இடது ஸ்பின் பவுலரை தோனி அனுப்பியது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது .

தவறு ஏன்?

தவறு ஏன்?

இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது இடதுகை பவுலர்களை, அதுவும் ஸ்பின் பவுலர்களை களமிறக்குவது மிகவும் தவறான முடிவு ஆகும். ஆனால் நேற்று தோனி இந்த தவறான முடிவைதான் எடுத்தார். கரன் சர்மா வலது கை பவுலர். அவரை பவுலிங் செய்ய வைத்து இருந்தால் கூட ஏதாவது அதிசயம் நடந்து இருக்கும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜாவை அனுப்பியது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது குறித்து பேட்டி அளித்த பிளமிங், நேற்று ஜடேஜாவை அனுப்பும் பிளான் இல்லை. அவரை கடைசி ஓவர் போட வைக்கும் பிளான் இல்லை.ஆனாலும் பிராவோ இல்லாத காரணத்தால் அவரை அனுப்பினோம் என்று கூறியுள்ளார்.

ஏன் அனுப்பினார்

ஏன் அனுப்பினார்

பிளமிங் இப்படி வெளிப்படையாக கூறி இருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. ஜடேஜாவை அனுப்பும் பிளான் இல்லை என்றால் தோனி ஏன் அவரை அனுப்பினார். அதேபோல் ஏன் நேற்று கரன் சர்மா ஓவரை பயன்படுத்தவில்லை. பிராவோ வெளியேறுகிறார் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றபடி ஏன் தோனி பிளானை மாற்றவில்ல, என்று கேள்விகள் எழுந்துள்ளது.

Story first published: Sunday, October 18, 2020, 11:17 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
IPL 2020: It is not in our plan says Fleming on Sending Jadeja for last over.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+