Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்றுதான் கடைசி.. காலியாக போகும் கேப்டன் பதவி.. அங்குதான் டிவிஸ்டே..கே.எல் ராகுலுக்கு போடப்பட்ட கேட்

துபாய்: இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கே.எல் ராகுலின் பஞ்சாப் அணி இருக்கிறது.

2020 ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணி இந்த முறை அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. முதலில் டெல்லிக்கு எதிராக வெல்ல வேண்டிய போட்டியில் கடைசியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

அதன்பின் ஒரே ஒரு போட்டியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. 6 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் மொத்தம் 5 போட்டிகளில் தற்போது தோல்வி அடைந்துள்ளது.

இன்று போட்டி

இன்று போட்டி

இதனால் இன்று நடக்கும் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது. பஞ்சாப் அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் கே. எல் ராகுல்தான் காரணம் என்று புகார் உள்ளது. இவர் சரியான முடிவுகளை எடுப்பது இல்லை. அணி தேர்வில் சொதப்புகிறார் என்று புகார் உள்ளது. பவுலிங் ரொட்டேஷனில் சொதப்புகிறார் என்றும் புகார் உள்ளது.

வீரர்கள்

வீரர்கள்

அதேபோல் அணிக்குள் வீரர்களை தேர்வு செய்வதிலும் சொதப்புகிறார் .அணியில் டெத் ஓவர்களை வீச சரியான பவுலர்கள் இல்லை . ஆனாலும் கூட டெத் ஓவர்களை வீசுவதற்கு சரியான வீரர்களை இவர் களமிறக்கவில்லை. அணியில் கர்நாடக வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று நிறைய புகார்கள் வைக்கபட்டு வருகிறது.

கட்டாயம்

கட்டாயம்

இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி இருக்கிறது. இன்றும் பஞ்சாப் தோல்வி அடைந்தால் மொத்தமாக 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது போல ஆகிவிடும். அதன்பின் மொத்தமாக பிளே ஆப் வாய்ப்பும் பஞ்சாப்பை விட்டு செல்லும். இதனால் கே.எல் ராகுல் ஒரு கேப்டனாக இன்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

நீக்கம்

நீக்கம்

இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் தன்னை நிரூபிக்கவில்லை என்றால் அவரின் பதவி கூட காலியாக வாய்ப்புகள் உள்ளது. ஆம் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் கேஎல் ராகுல் தனது கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தாலும் செய்வார். இன்றுதான் அவருக்கு கடைசி வாய்ப்பு என்று கூறுகிறார்கள். பஞ்சாப் அணி நிர்வாகம் அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

டிவிஸ்ட்

டிவிஸ்ட்

ஆனால் அங்குதான் முக்கியமான டிவிஸ்ட் இருக்கிறது. பஞ்சாப் அணியில் தற்போது வேறு மூத்த வீரர்கள் யாரும் இல்லை. கேப்டன் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு மூத்த வீரர்கள் யாரும் இல்லை. இதனால் கே . எல் ராகுல் தன்னுடைய பதவி காலியாகாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தன்னை அவ்வளவு எளிதாக நீக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது. அதோடு அணியின் பயிற்சியாளர் பதவிக்குதான் அதிக சிக்கல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

கும்ப்ளே

கும்ப்ளே

ஆம் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேதான் அணியில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். இவர் எடுத்த தவறான முடிவுகளால்தான் அணி தோல்வி அடைந்தது என்று கே.எல் ராகுல் மொத்தமாக பழியை கும்ப்ளே மீது போட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இன்று நடக்கும் போட்டியை பொறுத்து பஞ்சாப் அணிக்குள் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, October 10, 2020, 15:05 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+