Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது மட்டும் நடந்தால் சிஎஸ்கேவை அசைக்கவே முடியாது.. வெளியான மாஸ் போட்டோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

துபாய்: சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்ட போட்டோ ஒன்று கடந்த சில வாரங்களாக ஐபிஎல் உலகில் நிலவி வந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதுதான் தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் முக்கியமான கேள்வியாக உள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற வாய்ப்புகள் உள்ளது.

இந்த சீசனிலேயே தோனியின் பேட்டிங் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. ஒரே ஒரு போட்டியில் 40+ ரன்கள் அடித்தவர் அடுத்த போட்டி எதிலும் சரியாக ஆடவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

தோனியிடம் இருந்த அந்த பழைய வேகம் இப்போது குறைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். கீப்பிங் நன்றாக செய்தாலும் கூட கேப்டன்சியில் தோனி செய்யும் சில விஷயங்கள் கணிக்க கூடிய வகையில்தான் இருக்கிறது. இதனால் தோனி இல்லாத சிஎஸ்கே அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த சீசன்களில் தோனி இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஓய்வு

ஓய்வு

தோனி எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சீசன் முடிந்த பின் அல்லது அடுத்த சீசனில் கூட ஓய்வை அறிவிக்கலாம். ஆனால் அதற்கு முன் சிஎஸ்கே புதிய அணியை உருவாக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். தோனி இல்லையென்றால் ரெய்னாதான் சிஎஸ்கே கேப்டன் என்று இதற்கு முன் கணிக்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இப்போது ரெய்னா சிஎஸ்கே அணிக்கு திரும்புவாரா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோல் ரெய்னாவின் கேப்டன்சியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பானது கிடையாது. இதனால் சிஎஸ்கே பெரும்பாலும் புதிய வீரரைத்தான் கேப்டனாக நியமிக்க அணுகும். பெரும்பாலும் சிஎஸ்கே கேன் வில்லியம்ஸனுக்கு வலை விரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஹைதராபாத் அணியில் இருக்கும் கேன் வில்லியம்சனுக்கு தற்போது அணியில் பெரிய மதிப்பு இல்லை. இரண்டு முறை அங்கு கேப்டனாக இருந்தும் கூட இப்போது டேவிட் வார்னர்தான் அணியை வழி நடத்துகிறார். கேன் வில்லியம்சனுக்கு போதுமான முக்கியத்துவம் ஹைதராபாத்தில் அளிக்கப்படுவது இல்லை. இதனால் அவர் அடுத்த சீசனில் வேறு அணிக்கு மாற கூட வாய்ப்பு உள்ளது. அடுத்த வருடன் மெகா ஏலம் வேறு நடக்க உள்ளது.

வேறு அணி

வேறு அணி

இந்த நிலையில்தான் வில்லியம்சனை சிஎஸ்கே தங்கள் பக்கம் இழுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்தேகங்கள், வியூகங்கள் கடந்த சில நாட்களாக உலவி வந்த நிலையில், சிஎஸ்கே செய்த டிவிட் ஒன்று இந்த சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. சிஎஸ்கே கோச் பிளமிங் உடன் கேன் வில்லியம்சன் நிற்கும் புகைப்படத்தை அந்த அணி பகிர்ந்து உள்ளது. இரண்டு பேருமே நியூசிலாந்து என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இதனால் அடுத்த வருடம் கேன் வில்லியம்சன் சிஎஸ்கே வர வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் பாக்சில் ஆருடம் சொல்லி வருகிறார்கள். முக்கியமாக தோனி அடுத்த வருடமும் கேப்டனாக இருப்பார். ஆனால் கேன் வில்லியம்சனை அணியில் எடுப்பார்கள். 2022ல் வேண்டுமானால் கேன் வில்லியம்சன் சிஎஸ்கே கேப்டனாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தோனிக்கு மாற்றாக வர வேண்டிய தகுதி வில்லியம்சனுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 16, 2020, 20:35 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+