Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி பண்ணுனீங்க? தோனியை பார்த்து கேன் வில்லியம்சன் செய்த காரியம்.. களத்தில் நடந்த அந்த சம்பவம்

துபாய்: ஐபிஎல் போட்டியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்து ஆட தொடங்கி உள்ளார் கேன் வில்லியம்சன். நேற்று ஹைதராபாத் அணிக்காக இவர் செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. ஐபிஎல்லில் அதிகம் கவனிக்கப்பட்ட அணியான ஹைதராபாத் மிக மோசமாக சொதப்ப தொடங்கி உள்ளது.

சிறப்பான பவுலிங் படை இருந்தும் ஹைதராபாத் அணி மோசமாக சொதப்பி வருகிறது. நேற்று டெல்லிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு ஹைதராபாத் அணி வெற்றியை நோக்கி திரும்பியது.

டெல்லி போட்டி

டெல்லி போட்டி

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் வார்னர் 45, பிரைஸ்டோ 53, கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்தனர்.

தோல்வி

தோல்வி

அதன்பின் ஆடிய டெல்லி இந்த இலக்கை எளிதாக அடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் வரிசையாக டெல்லி பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். ஷிகர் தவான் மட்டும் 34 ரன்கள் அடிக்க மற்ற எல்லோரும் வரிசையாக விக்கெட்டானார்கள். ரஷித் கான் மட்டும் ஹைதராபாத் அணிக்காக 4 ஓவர் போட்டு வெறும் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

இதனால் போட்டி முழுக்க மோசமாக திணறிய டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கேன் வில்லியம்சனின் வருகையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்று அணிக்கு திரும்பிய வில்லியம்சன் மிகவும் அதிரடியாக ஆடி 41 ரன்கள் எடுத்தார்.

பதிலடி

பதிலடி

கேப்டனாக இருந்த தன்னை அணியில் ஓரம்கட்டுகிறார்கள், வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று பார்க்காமல், புறக்கணிப்பு அனைத்திற்கும் தன்னுடைய பேட்டிங் மூலம் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளார். நேற்று நீண்ட நாட்களுக்கு பின் களத்திற்கு வந்தவர் முதல் போட்டியிலேயே மாஸ் காட்டினார். 26 பந்துகள் பிடித்த இவர் தொடக்கத்தில் அதிரடி ஷாட்களை ஆடினார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர்தான் இத்தனை நாட்கள் மோசமாக இருந்தது. அதற்கு ஒரே போட்டியில் கேன் வில்லியம்சன் தீர்வு கொடுத்தார். 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த வில்லியம்சன் 5 பவுண்டரி அடித்தார். இந்த போட்டியில் மிக முக்கியமான திருப்பு முனையாக இவர் இருந்தார். அதோடு நேற்றைய போட்டியில் இவர் வித்தியாசமான ஷாட்களை அடித்தார். ஏ.பி.டி போல ஸ்வீப் ஷாட்களை முயற்சி செய்தார்.

ஸ்வீப் ஷாட்

ஸ்வீப் ஷாட்

பெரிய அளவில் ரிஸ்கி ஷாட்களை ஆடாத வில்லியம்சன் நேற்று 360 டிகிரியில் சுற்றி சுற்றி மாஸ் காட்டினார். மற்ற வீரர்கள் அடிக்கும் தனித்துவமான ஷாட்களை இவரும் நேற்று அடித்து பார்த்தார். அப்படி இவர் சோதனை முயற்சிகளை செய்யும் போதுதான் அவுட்டானார். நேற்று ரபாடா பவுலிங் செய்த கடைசி ஓவரில்.. கேன் வில்லியம்சன் சிக்ஸ் அடிக்க நினைத்து ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார்.

தோனி

தோனி

தோனி சுற்றுவது போல பேட்டை அடியில் இருந்து கொண்டு வந்து ஹெலிகாப்டர் ஷாட் முயன்றார். அட வில்லியம்சன் ஹெலிகாப்டர் ஷாட் ஆடுகிறார் என்று மைதானமே ஒரு நிமிடம் ஆடிப்போனது. டீப் மிட் விக்கெட் திசையை நோக்கி பந்தும் வேகமாக சென்றது. ஆனால் அங்கு இருந்த அக்சர் சரியாக கேன் வில்லியம்சன் அடித்த பந்தை பிடித்து, அவரை அவுட் செய்தார். தோனி போல கடைசி ஓவரில் ஆட முயன்று இவர் அவுட்டானார். இதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

வேகம் இல்லை

வேகம் இல்லை

எல்லோரும் எளிதாக ஹெலிகாப்டர் ஷாட்டை ஆட முடியாது. தோனிதான் அதை உருவாக்கினார். பாண்டியா போன்ற வீரர்கள் இந்த ஷாட்டை ஆட முயன்று தோல்வி அடைந்துள்ளனர். இப்போது கேன் வில்லியம்சன் அதை ஆட முயன்று அவுட்டாகி உள்ளார். எல்லோரும் தோனியாகிவிட முடியாது. நீங்கள் இப்படி ஆடியதால்தான் அவுட்டானீர்கள். வில்லியம்சன் தனக்கு தெரிந்த ஸ்டைலை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவருக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Story first published: Wednesday, September 30, 2020, 9:11 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+