பயிற்சி வீடியோ கூட வந்ததே.. அனுஷ்கா பற்றி கவாஸ்கரின் கருத்து.. வம்பிழுக்கும் கங்கனா.. புதிய மோதல்!
டெல்லி: நடிகை அனுஷ்கா சர்மா குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறிய கருத்துக்கு நடிகை கங்கனா ரானாவத் தற்போது பதில் அளித்துள்ளார்.
பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் கோலி குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் பேசியது சர்ச்சையாகி உள்ளது .
நேற்று முதல் நாள் கவாஸ்கர் தனது வர்ணனையில், பஞ்சாப்பிற்கு எதிராக கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் மிக மோசமாக சொதப்பிவிட்டார். லாக்டவுன் நேரத்தில் கோலி சரியாக பயிற்சி செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால் மோசம்
மேலும், அனுஷ்காவின் பவுலிங்கில் கோலி பயிற்சி செய்து இருப்பார், என்று கவாஸ்கர் கூறி இருந்தார். அனுஷ்காவை பவுலிங் செய்ய சொல்லி அதில் கோலி பயிற்சி எடுத்து இருப்பார் என்று பொருள்படும் வகையில் கவாஸ்கர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதை சிலர் பாலியல் ரீதியாக திரித்து செய்தி வெளியிட்டதால் கவாஸ்கருக்கு எதிராக பலரும் பொங்கினார்கள்.

விமர்சனம்
இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவிற்கு ஆதரவாக பேசுவது போல அவரை விமர்சனம் செய்து இருக்கிறார் கங்கனா ரானாவத். கங்கனா கூறியதாவது, எனக்கு எதிராக பலரும் கருத்து கூறிய போது அனுஷ்கா அப்போது எனக்கு ஆதரவு தரவில்லை. எனக்கு எதிராக கூட அனுஷ்கா பேசி இருக்கிறார். ஆனால் இப்போது அதே பெண் வெறுப்பு உணர்வு அனுஷ்காவை கடிக்க வந்துள்ளது.

தவறு
அனுஷ்காவை கிரிக்கெட்டுக்குள் இழுப்பது முழுக்க முழுக்க தவறு. சுனில் கவாஸ்கர் இப்படி பேசி இருக்க வேண்டாம். அதே சமயம் அனுஷ்கா சர்மா தேவைப்படும் நேரங்களில் மட்டும் பெண்ணியம் பேசுவதும் தவறு. அதே சமயம் கவாஸ்கரின் கருத்தை பாலியல் ரீதியாக பார்ப்பதும் தவறு. அவரின் கருத்துக்கு பாலியல் கண்ணோட்டத்தை கொடுக்க கூடாது.

பயிற்சி
அனுஷ்கா சர்மா தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் தனது கணவர் கோலியுடன் பயிற்சி எடுத்தார். இந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியானது, என்று கங்கனா ரானாவத் குறிப்பிட்டுள்ளார். அதாவது கவாஸ்கர் அனுஷ்கா குறித்து பேசி இருக்க கூடாது என்று கங்கனா ரானாவத் ஒரு பக்கம் குறிப்பிட்டுள்ளார்.

நிலைப்பாடு
ஆனால் இன்னொரு பக்கம் அனுஷ்கா தனது கணவருடன் கிரிக்கெட் பயிற்சி செய்கிறார். இதனால் கவாஸ்கர் கருத்தை பாலியல் ரீதியாக பார்க்க கூடாது என்றும் கூறியுள்ளார். இதெல்லாம் போக எனக்கு அனுஷ்கா ஆதரவாக பேசவில்லை என்றும் கங்கனா ரானாவத் பேசியுள்ளார்... சரியாக சொல்லவேண்டும் என்றால் தென்னை மர சின்னத்தில் ஒரு குத்து.. ஏணி சின்னத்தில் ஒரு குத்து என்று கங்கனா இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications