Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நொடியில் திருப்பம்.. சிஎஸ்கேவில் சேர்க்கப்பட்ட ஜாதவ்.. தோனியின் முடிவிற்கு இதுதான் காரணம்!

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவில் அதிரடி திருப்பமாக கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டு உள்ளார். பல விமர்சனங்களுக்கு பின் நீக்கப்பட்ட ஜாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடக்கிறது. டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. சார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

வலுவான பேட்டிங் ஆர்டர்,பவுலிங் ஆர்டருடன் களமிறங்கும் டெல்லியை சிஎஸ்கே எப்படி எதிர்கொள்ள போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிட்ச் சேஸிங் செய்ய கடினமாக இருக்கும் என்பதால் தோனி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். சார்ஜா பிட்சில் எளிதாக முதலில் இறங்கி 200+ ரன்கள் அடிக்கலாம் என்பதால் தோனி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

சேர்ப்பு

சேர்ப்பு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவில் அதிரடி திருப்பமாக கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டு உள்ளார். பல விமர்சனங்களுக்கு பின் நீக்கப்பட்ட ஜாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் கேதார் ஜாதவ் சரியாக ஆடவில்லை.கடந்த 19 போட்டிகளாக ஜாதவ் சரியாக ஆடவில்லை.

நீக்கம்

நீக்கம்

அதிலும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கேதார் ஜாதவ் மிக மோசமாக ஆடினார். அந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடையவே ஜாதவ்தான் காரணமாக பார்க்கப்பட்டார். இதன் காரணமாகவே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

ஜாதவ் இன்று அணியில் சேர்க்கப்பட்டதற்கு முக்கியமாக சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி சிஎஸ்கே அணியில் சாவ்லா இருந்தால் 7 பவுலர்கள் இருப்பார்கள். இதனால் மிடில் ஆர்டர் மோசமாக இருக்கும். டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் வலிமையானது. அதனால் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டரை வலிமைப்படுத்த வேண்டும் என்று ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி நொடி

கடைசி நொடி

கடைசி நொடியில் சிஎஸ்கே அணியில் இந்த மாற்றம் நடந்துள்ளது. சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்வதால் ஜாதவ் அணிக்குள் வந்துள்ளார். இதன் மூலம் ஜாதவ் டென்ஷன் இன்றி ஆட முடியும். இதனால் அவர் பார்மிற்கு திரும்பவும் முடியும். அணியில் கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஜாதவ் வந்துள்ளார.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

6-7 இடத்தில் ஜெகதீசனை இறக்க முடியாது. ஆனால் ஜாதவ் ஏற்கனவே 6வது இடத்தில் இறங்கி ஆடி உள்ளார். இதன் காரணமாகவே தோனி ஜெகதீசனுக்கு பதிலாக ஜாதவை அணியில் எடுத்துள்ளார்.

Story first published: Saturday, October 17, 2020, 19:26 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+