Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கதை முடிய போகிறது.. சிஎஸ்கேவால் உருவான சிக்கல்.. தினேஷ் கார்த்திக்குக்கு வைக்கப்பட்ட செக்.. பின்னணி!

அபுதாபி: நாளை சிஎஸ்கேவிற்கு எதிராக நடக்கும் ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து சிஎஸ்கே தற்போது ஐபிஎல் தொடரில் புதிய புத்துணர்வை பெற்றுள்ளது. இதே புத்துணர்வுடன் நாளை சிஎஸ்கே அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

நாளை கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையில் அபுதாபியில் ஐபிஎல் போட்டி நடக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

முக்கியம்

முக்கியம்

நாளை நடக்கும் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் மீதம் இருக்கும் போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போதுதான் சிஎஸ்கே பிளே ஆப் செல்ல முடியும். இதனால் சிஎஸ்கே நாளைய போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

தயார்

தயார்

இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியும் நாளை எப்படியாவது வெல்ல வேண்டும். கொல்கத்தா இதுவரை நடந்த 4 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற 2 போட்டியிலும் வெல்ல வாய்ப்பு இருந்தும் கொல்கத்தா தோல்வி அடைந்தது. கொல்கத்தாவின் தோல்விக்கு முழுக்க முழுக்க கேப்டன்சி சொதப்பல்தான் காரணம் என்று புகார் உள்ளது.

கேப்டன்

கேப்டன்

கொல்கத்தாவிடம் மிக சிறப்பான அணி இருக்கிறது. நல்ல பவுலர்கள் இருக்கிறார்கள். சிறப்பான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னொரு பக்கம் அதிரடியாக ஆட ரசல், இயான் மோர்கன் போன்ற வீரர்கள் உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான வீரர்களை கொண்ட ஒரு அணியாக கொல்கத்தா உள்ளது. அப்படி இருந்தும் கூட கொல்கத்தா அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இதற்கு ஒரே காரணம் தினேஷ் கார்த்திக்தான் என்று புகார் வைக்கப்படுகிறது. அணியில் இருக்கும் ரசல், இயான் மோர்கன் போன்ற வீரர்களை சரியாக பயன்படுத்துவது இல்லை என்று தினேஷ் கார்த்திக் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. சரியான பவுலிங் , பேட்டிங் ஆர்டரை தினேஷ் கார்த்திக் பயன்படுத்துவது இல்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானும் இதனால் இயான் மோர்கனை கொல்கத்தா கேப்டனை நியமிக்க ஆலோசித்து வருகிறார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் நாளை நடக்கும் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். தன்னுடைய கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, அவர் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஆனால் சிஎஸ்கே விடாது

ஆனால் சிஎஸ்கே விடாது

ஆனால் நாளைய போட்டி சிஎஸ்கே உடன் நடக்கிறது. இதனால் கொல்கத்தா நாளை வெற்றிபெறுவது கஷ்டம் என்று கூறுகிறார்கள். நாளை சிஎஸ்கே வெற்றிபெறுவது கட்டாயம். கண்டிப்பாக நாளை நடக்கும் போட்டி அத்தனை எளிதாக இருக்காது. நாளைய போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் கொல்கத்தா கேப்டன் பதவியில் தினேஷ் கார்த்திக் நீடிப்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, October 6, 2020, 14:44 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+