Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாமே பொய்.. தினேஷ் கார்த்திக் பற்றி மௌனம் கலைத்த இயான் மோர்கன்.. பரபர பேச்சு.. என்ன நடந்தது?

துபாய்: கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கும், இயான் மோர்கனுக்கும் இடையில் மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இயான் மோர்கன் அது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் தொடரில் வெற்றி தோல்வியோடு ஆடி வருகிறது. 5 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா 3 போட்டிகளில் வென்றுள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக்கை நீக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக கோரிக்கைகள் எழுந்து வந்தது.

அதோடு இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் தினேஷ் கார்த்திக் தனது வெற்றிகளின் மூலம் பதில் அளித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து இயான் மோர்கன் முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அதில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நன்றாகவே செயல்பட்டு வந்து இருக்கிறார். அதேபோல் பயிற்சியாளர் மெக்கலம் அணிக்கு சிறப்பான பயிற்சி வழங்கி வருகிறார். இதுவரை தினேஷ் கார்த்திக், மெக்கலம் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

உண்மை இல்லை

உண்மை இல்லை

தினேஷ் கார்த்திக் மட்டும் இங்கு தன்னிச்சையாக செயல்படவில்லை. எங்கள் அணியில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு மட்டுமே தெரியும்.. வெளியில் நிறைய நிறைய விஷயங்களை பொய்யாக பேசுவார்கள். ஆனால் அதில் எல்லாம் கொஞ்சம் கூட உண்மையில்லை. மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு என்று எல்லோரும் சேர்ந்துதான் அணியில் செயல்படுகிறார்கள்.

தனிப்பட்ட முடிவு

தனிப்பட்ட முடிவு

இது தனிப்பட்ட தனியாக முடிவுகளை எடுப்பது இல்லை. அவர் எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்கிறார். அதற்கு ஏற்றப்படி அவர் முடிவுகளை எடுக்கிறார். இதுவரை அணியில் குழுவாக எடுத்த முடிவுகள் பெரிய அளவில் பலன் அளித்துள்ளது. இதுவரை கொல்கத்தாவின் முடிவுகளுக்கு குழு முடிவுகள் முக்கிய காரணமாக இருந்தது. அணியில் மூத்த வீரர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள்.

எங்கள் பொறுப்பு

எங்கள் பொறுப்பு

நாங்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அணியின் வெற்றிக்கு இது முக்கிய காரணமாக உள்ளது. அணியில் மூத்த வீரர்கள் முடிவுகளை எடுக்கும் போது ஒரு பிரச்சனை குறித்த தெளிவு எங்களுக்கு கிடைக்கிறது. மற்ற வீரர்களை இதனால் எளிதாக வழி நடத்த முடிகிறது. கேப்டன், துணை கேப்டன் மட்டுமின்றி மூத்த வீரர்களும் முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

எளிதாக முடிவு

எளிதாக முடிவு

இதனால் இக்கட்டான கட்டத்தில் நாங்கள் முக்கியமான முடிவுகளை எளிதாக எடுக்க முடிகிறது. எங்களின் அணியின் மிடில் ஆர்டர் நன்றாக இருக்கிறது. போட்டிக்கு ஏற்றபடி எங்களின் மிடில் ஆர்டரில் மாற்றம் செய்ய முடியும். இதுவே எங்களின் அணியின் பலமாக பார்க்கப்படுகிறது . அணிக்குள் எந்த விதமான மோதலும் இல்லை.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

வேறு வேறு வீரர்கள், வேறு வேறு திறமைகளை கொண்டு இருப்பார்கள். தினேஷ் கார்த்திக் வீரர்களின் திறமையை கணித்து சரியாக வழி நடத்துகிறார். அணியை சரியான பாதைக்கு கொண்டு செல்வதில் தினேஷ் கார்த்திக் திறமையான வீரராக இருக்கிறார்., என்று இயான் மோர்கன் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:35 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+