Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பிக்கை இழந்த டீம்.. அணிக்குள்ளேயே எதிரிகள்.. நெருக்கடியில் தமிழக வீரர்.. இன்றுதான் கடைசி வாய்ப்பு

அபுதாபி: இன்று நடக்கும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி தோல்வி அடைகிறது. மாறாக இன்னொரு பக்கம் ராஜஸ்தான், டெல்லி போன்ற அணிகள் வரிசையாக வெற்றிபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் அபுதாபியில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

தோல்வி பெற்ற அணிகள்

தோல்வி பெற்ற அணிகள்

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் நிரூபிக்க வேண்டும். அதிலும் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் மோசமாக ஆடிய கொல்கத்தா இன்று வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முக்கியமாக கேப்டன் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன்சியை காப்பாற்றிக்கொள்ள வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சிக்கல்கள்

சிக்கல்கள்

ஆனால் அணிக்குள் தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய சிக்கல்கள், பிரச்சனைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதலில் அவருக்கு கொல்கத்தா அணிக்கு உள்ளேயே எதிரிகள் உள்ளனர். அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரு ரசல் பல முறை தினேஷ் கார்த்திக்குக்கு எதிராக குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். தினேஷ் கார்த்திக் கேப்டன்சி சரி இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

அதேபோல் அவர் பேட்டிங் ஆர்டர் தேர்வு செய்யும் விதம் சரியில்லை என்று கூறியுள்ளார். எனக்கு சரியான வாய்ப்பு கொடுப்பது இல்லை என்று வெளிப்படையாக தினேஷ் கார்த்திக் மீது ரசல் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். இரண்டு வருடமாக இந்த பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த போட்டியிலும் ரசல் தாமதமாகவே களமிறக்கப்பட்டார்.

விளையாடவில்லை

விளையாடவில்லை

கடந்த போட்டியில் ரசல் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து அவர் சரியாக விளையாடவில்லை. வேண்டும் என்றேதான் அவர் சரியாக விளையாடவில்லை என்றும் நிறைய புகார்கள் வந்த வண்ண உள்ளது. கடந்த போட்டியில் ரசல் முன்பே இறங்கி இருக்கலாம். ஆனால் தினேஷ் கார்த்திக் மும்பைக்கு எதிரான போட்டியில் ஒன் டவுன் இறங்கினார்.அதன்பின் ராணா இறங்கினார்.

சரியாக விளையாடவில்லை

சரியாக விளையாடவில்லை

இதனால் ரசல் தினேஷ் கார்த்திக் மீது கோபத்தில் இருக்கிறார். அதனால்தான் சரியாக விளையாடவில்லை. தனக்கு என்று அணியில் இவர் ஆதரவாளர்களை வைத்து இருக்கிறார். ரசல் ஒரு பக்கம் பிரச்சனையாக இருக்க இன்னொரு பக்கம் புதிதாக வந்திருக்கும் இயான் மோர்கன், தினேஷ் கார்த்திற்குக்கு தலைவலியாக மாறியுள்ளார்.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

அவரை அணியில் எடுத்ததே, தினேஷ் கார்த்திக்கின் பதவியை பறிக்கவே என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் சரியாக கேப்டன்சி செய்யவில்லை என்றால் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் விரைவில் கொல்கத்தா கேப்டனாக வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவரை கொல்கத்தா அணி நிர்வாகம் எடுத்ததன் காரணமே இதுதான் என்கிறார்கள்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று இயான் மோர்கனும் தன்னை நிரூபித்துள்ளார். இன்னொரு பக்கம் தினேஷ் கார்த்திக்கும் இரண்டு வருடமாக சரியாக கேப்டன்சி செய்யவில்லை. கடந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. அவரின் அணி தேர்வும் சரியாக இல்லை.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இதனால் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டது என்று கூறுகிறார்கள். ஷாருக்கான் உட்பட அணி நிர்வாகிகள் யாரும் இவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இன்றைய போட்டியில் இவர் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் தொடரின் பாதியில் இவர் கேப்டன்சி பறிக்கப்படலாம்.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் பஞ்சாப் அணிக்கு சரியாக கேப்டன்சி செய்யவில்லை.இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதே நிலை தினேஷ் கார்த்திக்கு வரலாம். அஸ்வின் தினேஷ் கார்த்திக்கும் கூட கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படலாம். அவர் இன்று எப்படியாவது ஹைதராபாத் அணியை வீழ்த்தி தனது கேப்டன்சியை நிரூபிக்க வேண்டும், என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, September 26, 2020, 20:32 [IST]
Other articles published on Sep 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+