இப்போ சொல்லுங்க.. கடும் கோபத்தில் கோலி.. ஆரோன் பின்ச் வருகையால் ஆர்சிபி கேப்டன்சியில் குழப்பம்!
துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று பெங்களூர் அணியின் வெற்றியை தொடர்ந்து ஆர்சிபி அணிக்குள் கோலியின் கை ஓங்கி இருக்கிறது.
Recommended Video
நேற்று ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்று இருக்கிறது. தொடக்கத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெறுவது போல இருந்தது.
ஆனால் போக போக போட்டி பெங்களூர் வசம் சென்றது. முதலில் களமிறங்கிய பெங்களூர் 163 ரன்கள் எடுத்த நிலையில், அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்து தோல்வி அடைந்தது.

பெங்களூர் ஆரோன்
இந்த நிலையில் பெங்களூர் அணியில் ஆரோன் பின்ச் எடுக்கப்பட்டது என்று என்று கடந்த சில நாட்களாக கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அப்படி மூத்த வீரர்கள் ஆரோன் பின்சை அணியில் எடுத்தது ஏன் என்று நிறைய கேள்விகள் எழுந்தது. ஆர்பிசி அணி நிர்வாகத்தின் தனிப்பட்ட முடிவு இது, இதில் கோலியின் கை இல்லை என்றும் கூறப்பட்டது.

மூத்த வீரர்கள்
அப்போதுதான் நெட்டிசன்கள் பலர், கோலியிடம் இருந்து கேப்டன்சியை பறிக்கவே இப்படி செய்கிறார்கள். ஆரோன் பின்ச் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக ன்றாக வழி நடத்தினார். அதனால் அவரை இப்போது அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தொடரில் பெங்களூர் சரியாக விளையாடவில்லை என்றால், கேப்டனை மாற்ற வாய்ப்புள்ளது. பாதியில் ஆரோன் கேப்டனாக வாய்ப்புள்ளது என்றும் நெட்டிசன்கள் சந்தேகங்களை கிளப்பினார்கள்.

கேப்டன் வாய்ப்பு
அதே சமயம், அதெல்லாம் ஆரோன் பின்ச் அணியில்கேப்டனாக வாய்ப்பு இல்லை. பெங்களூர் மீண்டும் தோல்வி அடைந்தாலும் கூட கோலிதான் எப்போதும் கேப்டனாக இருப்பார் என்றும் ஆர்சிபியின் இன்னொரு ரசிகர்கள் தரப்பு கூறுகிறார்கள். ஆர்சிபி ரசிகர்களிலேயே தற்போது கோலிக்கு ஆதரவாகவும், புதிய கேப்டன் கேட்டும் இரண்டு தரப்பு இணையத்தில் டிவிட் செய்து வருகிறது.

நிர்வாகம் கோபமா
இப்படி இருக்கும் ஆர்சிபி அணி நிர்வாகமும் கூட இதே யோசனையில்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 9 வருடமாக ஆர்சிபியில் கோலி இருக்கிறார். அப்படி இருந்தும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று ஆர்சிபி அணி நிர்வாகத்தில் சிலர் கோபத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால்தான் ஆரோன் பின்சை கொண்டு வந்து கோலிக்கு நெருக்கடி தருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இப்போது சொல்லுங்க
ஆனால் அதுதான் நேற்று போட்டியில் கோலி வென்றுகாட்டி விட்டாரே, உமேஷ் போன்ற பவுலர்களை வைத்துக் கொண்டே ஹைதராபாத் அணியை வீழ்த்திவிட்டார். இதுதான் அவரின் திறமை. இப்போது சொல்லுங்க யார் பெஸ்ட் கேப்டன் என்று கோலியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இதனால் ஆர்சிபி அணியில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது


Click it and Unblock the Notifications