Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு செஞ்சிட்டேனே.. விரக்தியின் உச்சத்திற்கே சென்ற கோலி.. அடுத்த நொடியே டிவிஸ்ட்.. பரபரப்பு சம்பவம்

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இன்று பெங்களூர் கேப்டன் கோலி விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் அதன்பின்தான் களத்தில் மிகப்பெரிய திருப்பமே நடந்தது.

இன்று பஞ்சாப் அணிக்கும் பெங்களூருக்கும் இடையே துபாயில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பவுலிங்கை தேர்வு செய்தது.

துபாய் பிட்ச் சேஸ் செய்ய எளிதாக இருக்கும் என்பதால் பெங்களூர் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த நிலையில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் நிதானமாக ஆடியது.

கேஎல் ராகுல் அதிரடி

கேஎல் ராகுல் அதிரடி

முக்கியமாக கேஎல் ராகுல் தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடினார். தேவைப்படும் இடங்களில் அடித்து ஆடினார். ஒரு பக்கம் கேஎல் ராகுல் நிதானம் காட்ட இன்னொரு பக்கம் பெங்களூர் பவுலர் சாஹல் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். அதிரடியாக ஆடி வந்த மயங்க் அகர்வால் விக்கெட்டை எடுத்தார்.

சாஹல் எடுத்த விக்கெட்

சாஹல் எடுத்த விக்கெட்

இந்த நிலையில்தான் போட்டியில் மிகவும் சுவாரசியமாக சம்பவம் ஒன்று நடந்தது. பெங்களூர் பவுலர் சாஹல் போட்ட 9வது ஓவரின் இரண்டாவது பந்தில் நிக்கோலஸ் பூரான் பேட்டிங் செய்தார். அப்போது சரியாக பந்து அவரின் பேடில் பட்டது. பந்து மிக சரியான லைனில் சென்றது.

என்ன சந்தேகம்

என்ன சந்தேகம்

பார்க்க உறுதியாக இது எல்பிடபிள்யூ போல இருந்தது. ஆனால் நடுவர் எல்பிடபிள்யூ தரவில்லை. ஆனால் இது பார்க்க எல்பிடபிள்யூ போல இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கோலி ரிவ்யூ கேட்பாரா என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். கோலி ரிவ்யூ கேட்கவில்லை. ஆனாலும் அவருக்கு சந்தேகம் இருந்தது.

கோபம்

கோபம்

அப்போதுதான் அடுத்த பந்து முடிந்த பின், திரையில் ரிப்ளே காட்டப்பட்டது. அப்போது பந்து சரியாக லைனில் குத்தி, ஸ்டம்பை நோக்கி சென்றதும், அதை நிக்கோலஸ் பூரான் காலை வைத்து மறைத்ததும் உறுதியானது. இதனால் எல்பிடபிள்யூ கேட்டு இருந்தால் விக்கெட் கிடைத்து இருக்குமோ என்று கோலி விரக்தியானார். ரிப்ளேவை பார்த்துவிட்டு விரக்தியின் உச்சத்திற்கே அவர் சென்றார்.

ஆனால் டிவிஸ்ட்

ஆனால் டிவிஸ்ட்

தப்பு செய்து விட்டோமே என்று நினைத்தார். ஆனால் அடுத்த பாலில் மீண்டும் ரிப்ளே காட்டப்பட்டது. அதில் பந்து பேட்டில் லேசாக உரசி அதன்பின்தான் பேடில் பட்டது உறுதியானது. அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் உரசியது தெளிவானது. இதனால் ரிவ்யூ கேட்டு இருந்தால் கோலி மோசமாக சொதப்பி இருப்பார். இதை பார்த்ததும் கோலி சந்தோசம் அடைந்தார். நல்ல வேளை ரிவ்யூ எடுக்கவில்லை என்று வெளிப்படையாக உணர்வுகளை வெளிப்படுத்தி சிரித்தார்.

Story first published: Thursday, September 24, 2020, 21:35 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+