Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி நடக்காது.. இரவு முழுக்க மைதானத்தில் இருந்த கோலி.. ஈகோவை சீண்டிய விமர்சனம்.. என்ன நடந்தது?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் அவர் தனிப்பட்ட முறையில் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடர் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தொடராக மாறியுள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஷமி, சாஹல் தவிர வேறு யாரும் சரியாக இந்த முறை விளையாடவில்லை..

பும்ரா, ரோஹித் சர்மா, பாண்டியா, ஜடேஜா, கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், ஓய்வு பெற்ற தோனி என்று முக்கியமான வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. அதிலும் இந்திய அணியின் கேப்டன் கோலி மிக மோசமாக ஆடி வருகிறார்.

கோலி எப்படி

கோலி எப்படி

இந்த ஐபிஎல் தொடர் கேப்டன் கோலிக்கு கெட்ட கனவாக மாறி உள்ளது. இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்து ஆர்சிபி அணியே ஆச்சர்யமாக வெற்றிபெற்றாலும் கோலி மோசமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். கடந்த தொடரையும் சேர்த்து மொத்தம் 8 ஐபிஎல் போட்டிகளில் கோலி வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனையை செய்துள்ளார்.

மோசம்

மோசம்

கிங் கோலி இப்படி மோசமாக பார்ம் இன்றி தவிப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. எவ்வளவு முயன்றும் அவரால் பார்மிற்கு திரும்பவில்லை. அதிலும் கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளில் மோசமான ஷார்ட்களை தேர்வு செய்து வருகிறார். கோலி களத்திற்கு வந்தவுடன் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விடுகிறார். முன்பு போல பேட்டை சுற்ற முடியாமல், பந்தை கணிக்க முடியாமல், பீல்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

டெஸ்ட் எப்படி

டெஸ்ட் எப்படி

எப்போதும் அதிரடியாக ஆடும் கோலி இப்போதெல்லாம் டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆடுகிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கோலி பார்ம் அவுட் ஆகிவிட்டார். இனி கோலி பார்ம் திரும்புவது கஷ்டம்தான் என்று கூறுகிறார்கள். உலகக் கோப்பை தொடரிலும் கேப்டன் கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. ரோஹித் சர்மா அதிரடியாக சதங்களை அடிக்க கோலி சதம் அடிக்க முடியாமல் திணறி வந்தார்.

விமர்சனம் என்ன

விமர்சனம் என்ன

இதனால் கோலி மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அவ்வளவுதான் கோலியின் பிரைம் டைம் முடிந்துவிட்டது . இனியும் இந்திய அணி கோலியை நம்பி இருக்க கூடாது என்றும் கூட விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக எழும் விமர்சனங்கள் காரணமாக கோலி கடுமையான கோபத்திலும், விரக்தியிலும் இருப்பதாக கூறுகிறார்கள்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இப்படி தன்னுடைய ஈகோவை சீண்டும் அளவிற்கு விமர்சனங்கள் வைக்கப்பட்ட காரணத்தால் நேற்று இரவு முழுக்க கோலி கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். சக வீரர்கள் எல்லோரும் சென்றபின்பும் கூட கோலி பேட்டிங் பயிற்சி செய்துள்ளார். அதிகாலை வரை இவர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். தன்னுடைய வீக்னஸ் எது என்று அவருக்கு தெரியும்.. அந்த ஷாட்களை மீண்டும் மீண்டும் இவர் ஆடினார்.

ஆடினார்

ஆடினார்

முக்கியமாக ஸ்பின் பவுலிங்கை மீண்டும் மீண்டும் போட சொல்லி அதை எதிர்கொண்டார். கேட்ச் கொடுக்காமல் விளையாடும் வகையில் ஷாட்களை பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு உள்ளுக்குள் கோபம் உள்ளது. அதை தற்போது பயிற்சியை நோக்கி திருப்பி உள்ளார்.அடுத்த போட்டியில் கோலியின் ஆக்ரோஷத்தை களத்தில் காணலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 2, 2020, 8:36 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+