Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈகோவை சீண்டிவிட்டார்கள்.. வேகமாக கிளம்பி சென்ற கோலி.. அடுத்த பிளான் ரெடி.. இப்போது என்ன செய்கிறார்?

துபாய்: இந்திய அணியின் கேப்டன் கோலி, தனது அடுத்த கட்ட பிளானிற்கு தயாராகி விட்டார். ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடிய நிலையில் தனது பார்மை மீட்டு எடுக்க கோலி முடிவு செய்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடர் முடிந்துள்ளது. இந்த தொடரில் தொடக்கத்தில் நன்றாக ஆடிய பெங்களூர் அணி போக போக மோசமாக ஆடியது.

வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்த பெங்களூர் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இந்த முறையும் பெங்களூர் அணியின் கோப்பை வெல்லும் கனவு நிறைவேறவில்லை.

எப்படி

எப்படி

இந்த தொடர் முழுக்க பெங்களூர் அணியின் கேப்டன் கோலியின் பேட்டிங் பெரிய அளவில் சிறப்பாக இல்லை. இரண்டு போட்டியில் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்த கோலி மற்ற போட்டிகளில் சரியாக ஆடவில்லை. பெங்களூர் அணி கட்டாயமாக ஆட வேண்டிய போட்டிகளில் கூட கோலி மோசமாக சொதப்பினார்.

கிண்டல்

கிண்டல்

இதனால் கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான கிண்டல் செய்து வருகிறார்கள். இவர் பார்ம் அவுட் ஆகிவிட்டார். வீட்டில் லாக்டவுன் காரணமாக பார்மை இழந்துவிட்டார். இனிமேலும் கோலிக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. மாறாக பிசிசிஐ ரோஹித் சர்மாவிற்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்று பலர் கோலியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

கோலி எப்படி

கோலி எப்படி

இந்த நிலையில் தனிப்பட்ட வகையில் கோலி கடும் விரக்தியில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சரியாக ஆட முடியவில்லையே என்ற விரக்தியில் கோலி உள்ளார். இந்த நிலையில்..ஆஸ்திரேலிய தொடரில் எப்படியாவது பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று கோலி முடிவு செய்துள்ளார்.

பயிற்சி

பயிற்சி

இதற்காக இப்போதே அவர் பயிற்சியை தொடங்கிவிட்டார். ஆஸ்திரேலிய தொடருக்கு செல்லும் இந்திய அணி வீரர்கள் யாரும் துபாயில் இருந்து வெளியேறவில்லை. இந்திய பயிற்சி குழுவும் துபாய் சென்றுவிட்டது. இந்த குழுவுடன் தற்போது கோலி இணைந்துவிட்டார். இந்த குழுவுடன் தற்போது கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தீவிரம்

தீவிரம்

எப்படியாவது தன்னை நிரூபிக்க வேண்டும் என்று கோலி தீவிரமாக முயன்று வருகிறார். நேற்று மட்டும் ஓய்வு எடுத்தவர் இன்று காலையே பயிற்சியை தொடங்கிவிட்டார். ஆஸ்திரேலிய தொடரில் நன்றாக ஆடி பார்மிற்கு திரும்ப வேண்டும் என்ற திட்டத்துடன் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Story first published: Sunday, November 8, 2020, 15:09 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+