Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர்தான் கேம்-சேஞ்சர்.. ஒரே நொடியில் போட்டியையே புரட்டி போட்டுவிட்டார்.. செம சீக்ரெட்டை உடைத்த கோலி

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, பெங்களூர் அணியின்
வெற்றிக்கான காரணத்தை கேப்டன் கோலி விளக்கி உள்ளார்.

நேற்று ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்று இருக்கிறது. தொடக்கத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெறுவது போல இருந்தது.

ஆனால் போக போக போட்டி பெங்களூர் வசம் சென்றது. முதலில் களமிறங்கிய பெங்களூர் 163 ரன்கள் எடுத்த நிலையில், அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்து தோல்வி அடைந்தது.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

முதல் போட்டியே வெற்றியோடு தொடங்கியது குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்துள்ளார்.அதில், பெங்களூர் அணி தொடக்கமே அருமையாக இருந்தது. எங்களது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தேவ்தத் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஆரோன் பின்ச் நன்றாக ஆடினார். கடைசி மூன்று ஓவர்களில் ஏபிடி அதிரடியாக ஆடினார். இதனால் எங்களின் ஸ்கோர் உயர்ந்தது.

 ரன்கள் அதிகமாக ஆனது

ரன்கள் அதிகமாக ஆனது

இதனால் 160 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முடிந்தது. எங்களின் அணியின் பவுலிங் தரப்புக்கும் நெகடிவ் எண்ணங்கள் வராமல் பார்த்துக் கொண்டோம். அது பெரிய அளவில் கை கொடுத்தது. சிவம் துபே மிக சிறப்பாக பவுலிங் செய்தார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு சாஹல் ஓவர் பெரிய அளவில் உதவியது. அவர் வந்து வரிசையாக முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

எத்தனை விக்கெட்

எத்தனை விக்கெட்

அதிலும் மணீஷ் பாண்டே விக்கேட், ஜானி பிரைஸ்டோ விக்கெட், விஜய் சங்கர் விக்கெட் என்று வரிசையாக முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். அவர் களத்திற்கு வந்தார், போட்டியை மாற்றிவிட்டார். என்னை கேட்டால் இந்த போட்டியின் கேம் செஞ்சர் சாஹல்தான் என்று கூறுவேன். அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

திறமை இருந்தால்

திறமை இருந்தால்

திறமை இருந்தால் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதை சாஹல் நிரூபித்து உள்ளார். அவர் சரியான லைனில் பந்து வீசியது மகிழ்ச்சி அளித்தது. கடந்த வருடம் எங்கள் அணிக்கு மோசமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது, எங்கள் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது, ஆனாலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும், என்று கோலி குறிப்பிட்டு இருந்தார்.

Story first published: Tuesday, September 22, 2020, 9:14 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+