For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 வருட கனவு.. எவ்வளவு அவமானம், கிண்டல்கள்.. விட்டுக்கொடுத்த சிஎஸ்கே.. கொக்கி போட்டு தூக்கிய கோலி!

துபாய்: பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கடந்த 7 வருடமாக போட்டு வந்த திட்டங்கள் இன்றுதான் செயலுக்கு வந்தது. இந்த 7 வருடத்தில் கேப்டன் கோலி பட்ட அவமானங்கள் சொல்லி மாளாதது.

பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் இந்த முறையும் டாப் ஆர்டரில் சொதப்பியது. 20 ஓவரில் ராஜஸ்தான் 177 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 46 ரன்களும், ஸ்மித் 57 ரன்களும் எடுத்தனர்.

மேட்ச் எப்படி

மேட்ச் எப்படி

இந்த போட்டியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது பெங்களூர் அணியின் பவுலிங்தான். இன்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியின் பவுலர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட சிறப்பாக பந்து வீசி இருந்தனர். உடானாவை தவிர இன்று எல்லோரும் பெங்களூர் அணியில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

நீக்கம்

நீக்கம்

பெங்களூர் அணியில் இந்த சீசனில் சரியாக பந்து வீசாத உமேஷ் யாதவ், சிராஜ் இரண்டு பேருமே இன்று அணியில் இடம்பெறவில்லை. இதற்கு பதிலாக அணியில் இன்று ஷாபாஸ் அஹமது மற்றும் சிங் மன் இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இவர்கள் எல்லோருமே இன்று சிறப்பாக பந்து வீசினார்கள். அதிலும் முக்கியமாக கிறிஸ் மோரிஸ் ஓவர் இன்று மிகவும் சிறப்பாக அமைந்தது.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

மொத்தம் நான்கு ஓவர்கள் போட்ட மோரிஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதில் அவர் 4 விக்கெட் எடுத்தார். தன்னுடைய முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள் கொடுத்தார். அதன்பின் 6வது ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார். 16வது ஓவரில் மட்டுமே 14 ரன்கள் கொடுத்தார். அதன்பின் கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்தார் .

செம

செம

ஆம் பெங்களூர் அணியில் ஒரு பவுலர் டெத் ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். பெங்களூர் அணி பல காலமாக ஒரு நல்ல டெத் பவுலர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தது. 15 ஓவர்கள் தாண்டி விட்டாலே யாருக்கு பவுலிங் கொடுப்பது என்று தெரியாமல் குழம்பும் நிலைக்குதான் கோலி செல்வார். அணியில் எடுக்கப்பட்ட ஸ்டெயினும் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

மோசம்

மோசம்

இதனால் ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் போட்டியில் கூட பெங்களூர் மோசமாக தோல்வி அடைந்தது. பெங்களூர் பல வருடங்கள் பிளே ஆப் செல்லாமல் சறுக்கியதற்கு கூட பெங்களூர் அணியின் பவுலிங்தான் காரணமாக இருந்தது. கோலியை மோசமான கேப்டன் என்று பலரும் கிண்டல் செய்வதற்கும், பெங்களூர் அணியை கடுமையாக கலாய்ப்பதற்கும் அந்த அணியின் பவுலிங் ஆர்டர் முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

கடந்த 7 சீசன்களாக பெங்களூர் இந்த கஷ்டத்தை அனுபவித்து வந்தது. ஆனால் தற்போது அதே பெங்களூர் அணியில் கிறிஸ் மோரிஸ் போன்ற பவுலர் கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்து, மொத்தம் 4 விக்கெட் எடுத்துள்ளார். கோலி இத்தனை நாட்களாக தேடிக்கொண்டு இருந்த அந்த பவுலர் தற்போது அவருக்கு கிடைத்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பல அவமானங்கள், கிண்டல்கள் கடந்த சரியான வீரரை கோலி இந்த வருடம் அணியில் எடுத்துள்ளார்.

2013

2013

2013 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடியவர்தான் மோரிஸ். அந்த தொடரில் சிஎஸ்கே பைனல் செல்ல முக்கிய காரணமாக மோரிஸ் இருந்தார். அதன்பின் ராஜஸ்தான், டெல்லி அணிக்கு இவர் சென்றார். சிஎஸ்கே ஒரு காலத்தில் வேண்டாம் என்று அனுப்பியவரை தற்போது பெங்களூர் அணி கொக்கி போட்டு தூக்கி உள்ளது. கோலி தனக்கான ஒரு பவுலரை இப்போதுதான் கண்டுபிடித்து உள்ளார்.

Story first published: Saturday, October 17, 2020, 18:57 [IST]
Other articles published on Oct 17, 2020
English summary
IPL 2020: Kohli finally finds a better bowler for final over in his RCB team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+