Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை பார்த்தால் அவர் மீண்டும் கிரிக்கெட்டே ஆட மாட்டார்.. கத்திய கோலி.. பதறிய இளம் வீரர்.. பின்னணி!

துபாய்: நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி மைதானத்தில் நடந்து கொண்ட விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி 20 ஓவரில் 196 ரன்கள் எடுத்தது.அதன்பின் இறங்கிய பெங்களூர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

விராட் கோலி மட்டுமே ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வந்தார். இதனால் பெங்களூர் வெறும் 137 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. வெற்றிகளை குவித்து வந்த பெங்களூருக்கு இது பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

நிலை என்ன

நிலை என்ன

நேற்று நடந்த போட்டியில் டெல்லி வீரர் பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வந்தார். இந்த ஐபிஎல் சீசனில் பிரித்வி ஷா நல்ல பார்மில் இருக்கிறார். நேற்று 23 பந்துகள் பிடித்த இவர் 42 ரன்கள் எடுத்தார். 2 சிக்ஸர், 5 பவுண்டரி அடித்தார்.

டெல்லி அணி

டெல்லி அணி

டெல்லி அணியில் மற்ற வீரர்கள் சரியாக ஆடாத நிலையில், பிரித்வி ஷா மிகவும் சிறப்பாக ஆடினார். முக்கியமாக பெங்களூரின் முக்கியமான பவுலர்களான உடானா மற்றும் சைனி பவுலிங்கில் பிரித்வி ஷா தெறிக்கவிட்டார். இவரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் பெங்களூர் வீரர்கள் திணறினார்கள்.

திணறல்

திணறல்

இந்த நிலையில்தான் சிராஜ் போட்ட 7வது ஓவரில் பிரித்வி ஷா அவுட்டானார். 138 கிமீ வேகத்தில் சிராஜ் வீசிய பவுன்சர் பிரித்வி ஷா தலைக்கு அருகில் சென்றது. ஹெல்மெட்டை தாக்குவது போல வந்த பந்தை பிரித்வி ஷா சுற்றி அடிக்க முயன்றார். ஆனால் அவரால் சரியாக பந்தைசுற்ற முடியவில்லை. இதனால் கீப்பிங் செய்த டி வில்லியர்ஸ் அதை சரியாக பிடித்தார்.

அவுட்

அவுட்

டி வில்லியர்ஸ் இந்த பந்தை பிடிப்பார் என்று பிரித்வி ஷா நினைக்கவில்லை. விக்கெட் விழுந்ததை பார்த்ததும் கோலி வேகமாக கத்திக் கொண்டே ஓடி வந்தார். ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டை எடுக்கும் போது எப்படி கத்துவாரோ அப்படி கோலி கத்தினார். நேற்று பிரித்வி ஷா களத்தில் கொஞ்சம் திமிராக நடந்து கொண்டார். ஒவ்வொரு முறை பவுண்டரி அடிக்கும் போது பிரித்வி ஷா கொஞ்சம் திமிராக செயல்பட்டார்.

திமிர்

திமிர்

இதனால்தான் அவர் விக்கெட் விழுந்ததும் கோலி ஆக்ரோஷம் அடைந்தார். ஓ என்று கத்திக்கொண்டு, இந்தியில் திட்டியபடி ஆக்ரோஷமாக கோலி ஓடி வந்தார்.கோலிக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. ஆனால் கோலி இப்படி கோபமாக வந்ததை பார்த்து பிரித்வி ஷா அதிர்ச்சி அடைந்தார். இதனால் தலையை தொங்க போட்டபடி வேகமாக அவர் பெவிலியன் சென்றார்.

நெட்டிசன்கள் கிரிக்கெட்

நெட்டிசன்கள் கிரிக்கெட்

இதை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இதை பார்த்தால் பிரித்வி ஷா மீண்டும் கிரிக்கெட்டே ஆட மாட்டார். அவர் எல்லாம் சின்ன பையன். அவரிடம் இப்படி கோபத்தை காட்டலாமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேட்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Tuesday, October 6, 2020, 10:30 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+