Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலியாகிறது தோனியின் இடம்.. கோலி ஸ்கெட்ச்.. ஒரே வாரத்தில் மாற்று வீரர்.. இந்திய அணியில் திருப்பம்!

துபாய்: இந்திய அணியில் தோனியின் இடம் காலியாக இருப்பதால் அணிக்குள் வர போகும் புதிய கீப்பர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உடனடியாக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள தொடரில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடும் வீரர்கள் இந்த தொடருக்கு தேர்வாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் தோனியின் இடம் காலியாகி உள்ளது. தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று உள்ளார். இதனால் அவரின் இடம் காலியாக உள்ளது. இதனால் தோனியின் இடத்தில் முக்கியமான மாற்று வீரரை இறக்க வேண்டும். நன்றாக மிடில் ஆர்டர் பேட்டிங் செய்ய கூடிய, பிரஷரை தாங்க கூடிய வீரரை இறக்க வேண்டும்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் வீரர்களின் பார்மை வைத்த இந்திய அணியின் புதிய கீப்பர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள். இன்னும் ஒரே வாரத்தில் இந்திய அணியின் புதிய கீப்பர் தேர்வு செய்யப்படுவார். பெரும்பாலும் இரண்டு வீரர்கள் இந்திய அணியில் கீப்பராக தேர்வாக வாய்ப்புள்ளது. டி 20 அணிக்கு பண்ட் கீப்பராக தேர்வாக வாய்ப்புள்ளது.

வேறு அணி

வேறு அணி

ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கீப்பராக கே.எல் ராகுல் தேர்வாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கே.எல் ராகுல் இந்த ஐபிஎல் சீசனில் மிக சிறந்த பார்மில் இருக்கிறார். எல்லா போட்டியிலும் 50+ ரன்களை அடிக்கும் இவர் தலைசிறந்த பார்ம் கொண்ட வீரராக இருக்கிறார். இதனால் கண்டிப்பாக இவர் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது. அதேபோல் பண்டும் நன்றாகவே ஆடி வருகிறார்.

பண்ட் எப்படி

பண்ட் எப்படி

பண்ட் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளாக ஆடவில்லை என்றால் நல்ல பார்மில்தான் இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரையும் அணியில் எடுக்க கோலி ஆலோசனை செய்து வருகிறார். ஆனால் இன்னொரு பக்கம் தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் நன்றாக ஆடினாலும் ஐபிஎல் சீசனில் போக போக சரியாக ஆடவில்லை.

மோசம்

மோசம்

போக போக இவர்கள் பார்ம் இழந்துவிட்டனர். இதனால் இவர்களில் ஒருவர் பெரும்பாலும் மாற்று வீரராக அணியில், எடுக்கப்படலாம். தினேஷ் கார்த்திக் பெரும்பாலும் மாற்று கீப்பராக அணியில் எடுக்கப்படலாம் . இந்த ஆஸ்திரேலிய தொடருக்கு எடுக்கப்படும் அணிதான் அடுத்த வருடம் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் .

Story first published: Wednesday, October 21, 2020, 12:47 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+