Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று நடந்த 2 சம்பவம்.. போட்டிக்கு முன்பாக சிஎஸ்கேவிற்கு போடப்பட்ட கேட்.. என்ன செய்ய போகிறார் தோனி?

துபாய்: நேற்று ஐபிஎல் தொடரில் நடந்த இரண்டு முக்கியமான சம்பவம் தற்போது சென்னை அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி தற்போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் எந்த அணிகள் எல்லாம் பிளே ஆப் செல்லும் என்பது குறித்த விவாதங்கள் தொடங்கி உள்ளது.

மும்பை மற்றும் மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் பிளே ஆப் செல்வது உறுதியாகி விட்டது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் 4வது இடத்தை பிடிப்பது எந்த அணி என்று கடுமையான விவாதம் நடந்து வருகிறது. கொல்கத்தா அணிதான் தற்போது வரை 4வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம் ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகளுக்கு இடையில் 4வது இடத்தை பிடிப்பதற்கான போட்டி நடந்து வருகிறது.

என்ன சம்பவம்

என்ன சம்பவம்

இந்த நிலையில்தான் நேற்று ஐபிஎல் தொடரில் நடந்த இரண்டு முக்கியமான சம்பவம் தற்போது சென்னை அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. நேற்று மதியம் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா கடைசியில் வெற்றிபெற்றது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

நேற்று வரை 4 போட்டிகளில் வென்று இருந்த கொல்கத்தா மேலும் ஒரு போட்டியில் வென்று 5 வெற்றிகளை குவித்து உள்ளது. அதேபோல் நேற்று பஞ்சாப் அணியும் கடைசி கட்டத்தில் மும்பைக்கு எதிராக வென்றது. இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்ற ஆட்டத்தில் பஞ்சாப் திரில் வெற்றிபெற்றது.

சென்னைக்கு சிக்கல்

சென்னைக்கு சிக்கல்

நேற்று கொல்கத்தா அணி வெற்றிபெற்ற காரணத்தால், சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 9 போட்டியில் ஆடியுள்ள கொல்கத்தா 5 போட்டிகளில் வென்றுள்ளது. மீதம் உள்ள 5 போட்டிகளில் கொல்கத்தா மூன்றில் வென்றால் கூட பிளே ஆப் சென்றுவிடும். ஆனால் சிஎஸ்கே 9 போட்டியில் 6 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே இனி நடக்கும் அனைத்து போட்டியிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இதனால் சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவு இப்போது ஆட்டம் காண தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் பஞ்சாப் அணியும் நேற்று பெற்ற வெற்றி காரணமாக சிஎஸ்கே அணிக்கு இணையான புள்ளிகளை பெற்றுள்ளது. இதனால் பஞ்சாப் அணி சிஎஸ்கேவை முந்தி 6ம் இடத்தை பிடித்துள்ளது.

மோசமான பிளே ஆப்

மோசமான பிளே ஆப்

பஞ்சாப்பிற்கும் பிளே ஆப் கனவு உயிர்ப்புடன் உள்ளது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான நிலையில் சிஎஸ்கே உள்ளது. இனி வரும் போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும். அதோடு மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும். இன்று நடக்கும் போட்டிக்கு முன் இதை மனதில் வைத்து சிஎஸ்கே களமிறங்க வேண்டும். இதை தோனி எப்படி நிகழ்த்த போகிறார், எப்படி சிஎஸ்கேவை பிளே ஆப் கொண்டு செல்ல போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, October 19, 2020, 20:10 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+