
முதல் போட்டி
முதல்முறையாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் அணியை வழி நடத்தினார். கொல்கத்தா அணியில் இன்று ராகுல் திரிபாதி, சுப்மான் கில், நிதிஷ் ராணா, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் , ரசல், கிரிஸ் கிரீன், பாட் கும்மின்ஸ், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடினார்கள். அணியில் பாண்டன், நாகர்கோட்டி நீக்கப்பட்டு மாவி, கிரிஸ் கிரீன் சேர்க்கப்பட்டனர்.

மும்பை
மும்பையில் பட்டின்சன் நீக்கப்பட்டு நாதன் சேர்க்கப்பட்டார். ரோஹித் சர்மா, டீ காக், சூர்யா குமார் யாதவ்,
இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சாகர், டிரெண்ட் போல்ட் , நாதன் நைல், பும்ரா ஆகியோர் ஆடினார்கள். மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

தோல்வி
இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 148 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் கும்மின்ஸ், மோர்கன் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. இதனால் மும்பை எளிதாக 16.5 ஓவரில் 2 விக்கெட்டிற்கு 149 ரன்கள் எடுத்து வென்றது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. கேப்டனாக இன்று முதல் போட்டியில் ஆடிய இயான் மோர்கன் நிறைய தவறுகளை செய்துள்ளார்.

பட்டியல்
பெரிய பட்டியலிடும் அளவிற்கு அணியில் தவறுகளை செய்துள்ளார். முதலில் அணியில் இருந்து நாகர்கோட்டியை நீக்கினார். அவருக்கு பதிலாக வந்த கிறிஸ் கிரீன் சரியாக பந்து வீசவில்லை. இதனால் மும்பை பேட்ஸ்மேன்கள் எளிதாக ஆதிக்கம் செலுத்தினார்கள். ஓவர் ரொட்டேஷனில் இயான் மோர்கன் மிக மோசமாக சொதப்பினார். மாவி போன்ற பவுலர்களை மிகவும் தாமதமாக பயன்படுத்தினார்.

பேட்டிங் ஆர்டர்
அதேபோல் பேட்டிங் ஆர்டரிலும் மிக மோசமாக சொதப்பினார்.தினேஷ் கார்த்திக் பயன்படுத்தி தோல்வி அடைந்த பேட்டிங் ஆர்டரை இன்றும் இயான் மோர்கன் பயன்படுத்தினார். அதேபோல் பீல்டிங் நிறுத்துவதிலும் நிறைய தவறுகளை செய்தார்.

தவறு
கேப்டன்சியை மறந்துவிட்டது போல இன்று இயான் மோர்கன் செயல்பட்டார். அணியில் இருக்கும் வீரர்களை சரியாக இவர் பயன்படுத்தவில்லை. இதனால்தான் மும்பை அணியிடம் கொல்கத்தா மிக எளிதாக தோல்வி அடைந்துள்ளது. பிளே ஆப் நெருங்கி வரும் நிலையில் கொல்கத்தா தனது தவறுகளை திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications