
பேட்டிங்
வரிசையாக அடுத்தடுத்து பஞ்சாப் இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் பஞ்சாப் அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் என்று அந்த அணியின் பேட்டிங் மாஸ் காட்டி வருகிறது. இந்த வருட ஐபிஎல்லில் டாப் ரன் ஸ்கோரர் இரண்டு பேருமே பஞ்சாப் அணியை சேர்ந்தவர்கள்தான்.

பேட்டிங்
ஆனால் இன்னொரு பக்கம் இரண்டு போட்டியிலும் பஞ்சாப் அணியின் பவுலிங்தான் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பஞ்சாப் பவுலிங்தான் போட்டியை மாற்றியது. நேற்று போட்டியிலும் பஞ்சாப் பவுலிங்தான் போட்டியின் முடிவை மாற்றியது. அதிலும் டெத் பவுலிங் அந்த அணிக்கு மிக மோசமாக உள்ளது.

மோசம் ஏன்?
இப்படி இருக்கும் போது யாராவது அணியில் இருக்கும் பவுலரை நீக்குவார்களா ? ஆனால் அனில் கும்ப்ளே அப்படி செய்துள்ளார். பஞ்சாப் பயிற்சியாளர் கும்ப்ளே அணியில் நன்றாக பவுலிங் செய்து கொண்டு இருந்த முருகன் அஸ்வினை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் என்ற கர்நாடகாவை சேர்ந்த ஆல் ரவுண்டரை அணியில் எடுத்துள்ளார்.

தவறு
அணியில் பவுலிங் கொஞ்சம் கூட பலமாக இல்லாத நிலையில் இருக்கிற ஒரு பவுலரையும் நீக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று கும்ப்ளேவை பலரும் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். அதேபோல் கருண் நாயரை அணியில் எடுத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். அவர் சுத்தமாக பார்மில் இல்லை. இருந்தும் அவர் கர்நாடகா என்ற ஒரே காரணத்திற்காக அணியில் எடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மன்தீப் சிங்
மன்தீப் சிங் போன்ற வீரர்கள் முழு பார்ம் உடன் இருந்தும் அவர்களுக்கு அணியில் இடம் கொடுப்பது இல்லை. கர்நாடகா கோட்டா என்று கூறி இன்னும் எத்தனை நாளுக்கு பஞ்சாப் அணியை காலி செய்வீர்கள். இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. வீரர்கள் பார்மில் இருந்து அணியில் எடுத்தால் ஓகே.. வெறும் கர்நாடகா என்ற காரணத்திற்காக அவர்களை அணியில் எடுப்பது தவறு என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

பிரீத்தி ஜிந்தா
பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், கருண் நாயர், கே.எல் ராகுல், கவுதம் ஆகிய கர்நாடக வீரர்கள் உள்ளனர். இதனால் தற்போது பிரீத்தி ஜிந்தாவும் கும்ப்ளே மீது கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். இவ்வளவு நல்ல வீரர்களை ஏலம் எடுத்தும் அவர்களை பயன்படுத்தாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ஜிந்தா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பஞ்சாப் அணிக்குள் நிலவி வரும் மறைமுகமான கர்நாடகா கோட்டா காரணமாக அணி நிர்வாகம் கும்ப்ளே மீதும், கே.எல் ராகுல் மீது கோபத்தில் உள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications