For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நீங்கள் சொல்ற மாதிரியெல்லாம் ஆட முடியாது".. சிஎஸ்கே மேட்சுக்கு பின் கொதித்த ஷமி.. என்ன நடந்தது?

துபாய்: சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பஞ்சாப் அணியின் மூத்த பவுலர் ஷமி நேற்று பேட்டி அளித்தார். வீரர்களின் பார்ம் குறித்த விமர்சனங்களுக்கு ஷமி கடுமையாக பதில் அளித்தார்.

நேற்று சிஸ்கே அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியின் தோல்வி காரணமாக கேப்டன் கே.எல் ராகுல் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

நல்ல டீம் இருந்தும் தொடர்ந்து அணியை தோல்வி பாதைக்கு கொண்டு செல்கிறார் என்று கே.எல் ராகுல் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளது. 5 போட்டிகளில் ஆடிய பஞ்சாப் தற்போது 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

தோல்வி

தோல்வி

நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த பஞ்சாப் தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மயங்க் அகர்வால், கே. எல் ராகுல், ஷமி போன்ற அதிரடி வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனாலும் கூட தொடர்ந்து பஞ்சாப் தோல்வி அடைந்து வருகிறது. முருகன் அஸ்வின் போன்ற நல்ல ஸ்பின் பவுலர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுப்பது இல்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

காரணம்

காரணம்

இந்த நிலையில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின் பேட்டி அளித்த பஞ்சாப் அணியின் மூத்த வீரர் ஷமி பல்வேறு விஷயங்களை கோபமாக தெரிவித்தார். அதில், கிரிக்கெட் வீரர்களின் உடல் என்பது கார் கிடையாது. பெட்ரோல் போட்டு ஓட்டுவதற்கு இது வாகனம் இல்லை. நாங்கள் மனிதர்கள். இதனால் சமயங்களில் கிரிக்கெட் வீரர்கள் பார்ம் அவுட் ஆவார்கள். இதை விமர்சனம் செய்ய கூடாது.

விமர்சனம் செய்ய கூடாது

விமர்சனம் செய்ய கூடாது

நீண்ட நாட்களுக்கு பின் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்பது போல விளையாட முடியாது. வீரர்கள் பார்ம் திரும்ப சில நாட்கள் ஆகும். வீட்டில் வொர்க் ஃபர்ம் ஹோம் பார்த்துவிட்டு அலுவலகம் செல்லும் நபர்களே அதிகம் கஷ்டப்படுகிறார்கள். வீட்டில் வேலை பார்த்தவர்களால் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிவதில்லை. அப்படி இருக்கும் போது கிரிக்கெட் வீரர்கள் பார்ம் திரும்ப பல நாட்கள் ஆகலாம்.

தவறு இல்லை

தவறு இல்லை

எங்களின் பயிற்சியில் பெரிய பிரேக் விழுந்துவிட்டது. இதனால் பலரின் பிட்னஸ் பாதிக்கப்பட்டு உள்ளது . இப்படி இருக்கும் போது வீரர்கள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். என்னை போன்ற சில வீரர்கள் ஓய்வு காலத்தில் உடலை பார்மில் வைத்து இருந்தனர். ஆனால் எல்லா வீரர்களும் உடலை அப்படி வைத்திருக்க முடியாது. எல்லோருக்கும் அந்த வசதி இருக்காது.

மீண்டு வருவேன்

மீண்டு வருவேன்

இப்போது பார்ம் இன்றி கஷ்டப்படும் வீரர்களை விமர்சனம் செய்ய கூடாது.2015ல் எனக்கு காயம் ஏற்பட்ட போது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பலரும் எழுதினார்கள். ஆனால் நான் காயத்தில் இருந்து மீண்டு பார்மிற்கு வந்தேன். இதனால் வீரர்களின் பார்மை வைத்து அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடாது. அவர்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டியது கட்டாயம், என்று ஷமி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, October 5, 2020, 14:14 [IST]
Other articles published on Oct 5, 2020
English summary
IPL 2020: KXIP player Shami talks about the form of the players after CSK match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+