Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி.. பிளந்து கட்டிய மும்பையின் மூவர் படை.. கடைசி 5 ஓவர்.. அரண்டு போன பஞ்சாப் படுதோல்வி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் நிதான ஆட்டம் ஆடினாலும் கடைசி 5 ஓவர்கள் திட்டமிட்டு வெறியாட்டம் ஆடியது. ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா என மூன்று அதிரடி வீரர்கள் பஞ்சாப் பந்துவீச்சை பிளந்து கட்டினர்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக எந்த மாற்றமும் செய்யவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் இறங்கியது. பஞ்சாப் அணியில் முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு, கிருஷ்ணப்பா கௌதம் அணியில் சேர்க்கப்பட்டார். முருகன் அஸ்வின் சிறப்பாகவே செயல்பட்டு வந்தாலும், கீரான் பொல்லார்டு அதிரடியை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னர் கௌதமை அணியில் சேர்த்தது பஞ்சாப் அணி.

டி காக் டக் அவுட்

டி காக் டக் அவுட்

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் டி காக் 5 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன் பின் இஷான் கிஷன் - ரோஹித் சர்மா நிதான ஆட்டம் ஆடினர்.

ரோஹித் அதிரடி

ரோஹித் அதிரடி

இஷான் கிஷன் 32 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி 102 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. நிதான ஆட்டம் ஆடி வந்தது. கடைசி 5 ஓவர்கள் துவங்கிய உடன் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். நீஷம் வீசிய 16வது ஓவரில் 22 ரன்கள் குவித்தார்.

பொல்லார்டு

பொல்லார்டு

45பந்துகளில் 70 ரன்கள் குவித்த ரோஹித் 17வது ஓவரின் துவக்கத்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் கீரான் பொல்லார்டு அதிரடி ஆட்டம் ஆடினார். அவரும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து சிக்ஸ், ஃபோர் என திட்டமிட்டு அதிரடி ஆட்டம் ஆடினர்.

மும்பை ஸ்கோர்

மும்பை ஸ்கோர்

பொல்லார்டு 20 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். பாண்டியா 11 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி பந்துவீச்சு திட்டம் படுதோல்வி அடைந்தது.

கடைசி 5 ஓவர்

கடைசி 5 ஓவர்

கடைசி 5 ஓவர்களில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி 89 ரன்கள் குவித்தது. கோட்ரெல் மட்டுமே சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்தார். நீஷம் 52, கௌதம் 45 ரன்கள் வாரி இறைத்தனர். மூன்று ஓவர்கள் கட்டுக்கோப்பாக வீசிய ஷமியின் கடைசி ஓவரிலும் கூட 19 ரன்கள் குவித்தது மும்பை.

பஞ்சாப் சொதப்பல்

பஞ்சாப் சொதப்பல்

192 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்தது. மயங்க் அகர்வால் 25, கருண் நாயர் டக் அவுட் என 39 ரன்களுக்கு 2 விக்கெட்கள் வீழ்ந்தது. அடுத்து ராகுல் 17, ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பூரன் போராட்டம்

பூரன் போராட்டம்

நிக்கோலஸ் பூரன் மட்டும் போராட்டம் நடத்தினார். அவர் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். அதன் பின் மேக்ஸ்வெல் 11, நீஷம் 7, சர்ப்ராஸ் கான் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கௌதம் கடைசி வரை நின்று 22 ரன்கள் சேர்த்தார்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா 2, சாஹர் 2, பாட்டின்சன் 2, ட்ரென்ட் போல்ட் 1, க்ருனால் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

Story first published: Thursday, October 1, 2020, 23:35 [IST]
Other articles published on Oct 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+